பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 113

துறவியாக இருந்தால் அது பொருந்தும். நீங்கள் எப்போது ஒரு

ஸ்திரீயைக் கண்டு ஆசை கொள்ளுகிறீர்களோ, அப்போது

நீங்கள் துறவி என்ற பெயரை இழந்து சாதாரண மனிதனென்ற

நிலைமைக்கு வந்துவிடுகிறீர்கள். ஜனசமூகத்திலுள்ள ஒருவித

f ffFf பொருளின்மேல் நீங்கள் ஆசைப்படும்போது அவர்க

ளுடைய கட்டுப்பாட்டின்படி நடக்க நீங்கள் ஒப்புக்கொண்டே தீரவேண்டும். அதுவுமன்றி, அவரவர்கள் இயற்கையாக உண்டாகும் தமது ஆசைகளை அப்படியப்படியே நிறைவேற்றிக்

கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களே! அதன்படி செய்ய

இருதிறத்தாருடைய சம்மதமும் அவசியமல்லவா? நீங்கள்

நாடும் ஒரு விஷயத்தை நான் முற்றிலும் வெறுக்கிறேன்.

ஆகையால், நீங்கள் அந்த இடையூறையாவது மதித்து என்னை

விட வேண்டும்’ என்றாள். .

அதைக்கேட்ட பண்டாரம் மோகாவேசங் கொண்டவராய், ‘அடி பெண்ணே முதலில் நீ பல பல ஆட்சேபணைகளைச் சொன்னாய். இப்போது அவைகளை எல்லாம் விட்டுவிட்டு உனக்கு என் மேல் பிரியமில்லையென்ற ஆட்சேபணையைச் சொல்லுகிறாய். முதலில் கடவுள் தண்டிப்பார் என்றாய்; பிறகு ஜனங்கள் கோபிப்பார்கள் என்றாய்; இப்போது உன் மனசு பிரியப்படவில்லை என்கிறாய். இப்போது பிரியமில்லா விட்டால், அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. உன்னைப் பலாத்காரம் செய்து வற்புறுத்தினால் உன் மனசுதானாகவே இணங்கிவிடுகிறது. அதைப்பற்றி நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறிய வண்ணம் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவளைக் கட்டிப்பிடிக்க முயன்றார்.

அந்த மகா அபாயகரமான வேளையில் தான் என்ன செய்து அந்த மகத்தான விபத்தைத் தடுப்பதென்பதை அறியாது கதி கலங்கி திகில் கொண்டுநின்ற பெண்மணி திடீரென்று ஏதோ யோசனை செய்து ஒருவிதமான தீர்மானம் செய்துகொண்டு, ‘ஐயா! நான் அநாதையாக இவ்விடத்தில் அகப்பட்டுக்