பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i41 பிணிகளும், அபாயங்களும் இருந்து கொண்டுதான் இருக்கும். அவனுக்கு மனசு என்கிற ஒரு வஸ்து இருக்கிற வரையில், ஆசாபாசங்களும், ஏமாற்றங்களும், துயரங்களும் இருந்து கொண்டுதாணிருக்கும். இதனால்தான்துறவிகள்பஞ்சேந்திரியங் களையும் உடம்பையும் அடக்கி, அவற்றின் பலத்திை ஒடுக்கி, மனசு ஈசுவர தியானம் ஒன்றையே நாடும்படி செய்கிறார்கள். அப்படிப்பட்டதபசிகளுக்கேதுன்பமும்துயரமும் அவ்வளவாக இராவென்று நாம் நினைக்கலாம். மற்ற எவர்களையும் துன்பம் விடாது. எனக்கு இப்போது சுமார் 45 வயசாகிறது. அதாவது, நான் உன்னைப் போல மூன்று மடங்கு அதிக காலம் இந்த உலகத்திலிருந்து பார்த்தாய் விட்டது. இதுவரையில் நான் அனுபவித்துள்ள சங்கடங்களையும் எனக்கு நேர்ந்துள்ள அபாயங்களையும் நான் எடுத்துச் சொல்லப் போனால், நீ மூக்கின்மேல் விரலை வைத்து ஆச்சரியப் படுவதோடு, நான் - சொல்வதையே நம்பமாட்டாய். இதுபோல ஒவ்வொருவர் விஷயமும், உள்ளே புகுந்து பார்த்தால், பரிதாபகரமாகத்தான் இருக்கும். நான் இப்போது பேசுகிற மாதிரியிலிருந்து நான் உன் விஷயத்தில் இரக்கம் கொள்ள வில்லை என்றாவது, அனு தாபப்படவில்லை என்றாவது நீஎண்ணிவிடக்கூடாது. எதற்காக நான் மற்றவருடையதுன்பங்களையும் துயரங்களையும் இந்தச் சந்தர்ப்பத்தில் எடுத்துக் காட்டுகிறேன் என்றால், இந்த உலகத்தில் மனிதராகப் பிறந்தால் அவர்கள் தண்ணிர் குடித்து, ஆகாரமுண்டு, தூங்குவது எப்படி சர்வ சாதாரணமான காரியமோ அதுபோல, அவர்கள் துயரப்படுவதும் துன்பம் அனுபவிப்பதும் சர்வ சாதாரணமான காரியம் என்பதை நாம் நம்முடைய மனசில் உறுதியாகப் பதிய வைத்துக் கொண்டால், நமக்கு எப்படிப்பட்ட அபாயம் நேர்ந்தாலும் விசனம் உண்டானாலும், அவைகள் அவ்வளவாக நம்முடைய மனசை பாதிக்கமாட்டா. முட்டைப்பூச்சி, கொசு, ஈ, எறும் பு முதலியவை நிறைந்த வீட்டில் இருப்போர், அவைகள் கடித்துக் கொண்டே இருந்தாலும், கவலையற்று பிரம்மாநந்தமாகத்