பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பூர்ணசந்திரோதயம்-5 என்னுடைய நடத்தையிலிருந்தே கண்டு கொண்டிருப்பாய். இப்போது இந்த இரண்டு மூன்று தினங்களாக என்னுடைய மனசில் இன்னொரு புதிய எண்ணம் உண்டாகிக் கொண்டிருக்கிறது. எனக்கோ வயசு ஆகிவிட்டது. வர வரத் தள்ளாமையும் அதிகரித்துவருகிறது. நீயோஅநாதை என்கிறாய்; நீ சகலமான நற்குணங்களும் பொருந்தியவளாக இருக்கிறாய்; என்னுடைய சலகமான சொத்துக்களையும் உன் பேரிலேயே எழுதி வைத்துவிட்டு, நீ எனக்கு வார்க்கும் கஞ்சியையோ கூழையோ குடித்துவிட்டு நான் நிம்மதியாக இருந்துவிடலாம் என்ற ஒரு நினைவு என் மனசில் உண்டாகிக் கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிற்கும் நீ உன்னுடைய விருத்தாந் தங்களை எல்லாம் சொல். மற்ற விஷயங்களைப் பிற்பாடு முடித்துக்கொள்ளலாம் என்றாள்.

அதைக் கேட்ட ஷண்முகவடிவின் மனதில் பலவிதமான உணர்ச்சிகள் உண்டாயின. தன்மீது ஹேமாபாயி கொண்டுள்ள அளவற்ற பிரியத்தைக் காண அவளது மனம் அபாரமான பூரிப்படைந்து பொங்கியது. நிரம்பவும் அபாரமாக இருந்த அவளது சொத்துக்கள் முழுதையும் அவள் தன் பேரில் எழுதிவைத்துவிட எண்ணுவதாகச் சொன்னதைக் கேட்க, ஹேமாபாயி நிரம் பவும் இளக்கமான மனதையுடைய நற்குணவதி என்ற அபிப்பிராயம் ஷண்முகவடிவின் மனதில் உண்டாயிற்று. தனது வரலாறு முழுவதையும் அவளிடம் வெளியிடலாமா, அல்லது பூனாவிலுள்ள பட்டமகிஷியின் மீது செய்யப்பட்டுள்ள சதியாலோசனை சம்பந்தமாக நடந்துள்ள விஷயங்களை மாத்திரம் விலக்கி, மற்றவைகளை வெளியிட லாமா என்று அந்த மடந்தை சிறிதுநேரம் சிந்தனை செய்தாள். நிரம்பவும் உத்தம குணம் வாய்ந்தவளாகத் தோன்றிய ஹேமா பாயிடம் தான் எந்த ரகசியத்தையும் கூசாமல் வெளியிடலாம் என்ற ஒர் எண்ணம் அவளது மனதில் எழுந்து தூண்டியது. ஆகையால், அவள் தனது குடும்ப வரலாறு முழுதையும்