பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 149 இடையிலிருந்த தழும்புகளை அவளது சேலை மறைத்துக்

கொண்டிருந்தது. வெளிப்பார்வைக்கு அவள் நெருப்பினால் அபாயம் அடைந்தவள் என்ற குறிப்பே தென்படவில்லை. நாளுக்கு நாள் அமோகமாகப் பெருகி வந்த அவளது அழகு அவள் ஹேமாபாயின் வீட்டிலிருந்த சுமார் இருபது தினங்களுக்குள் அதியற் புதமாக அபிவிரித்தி அடைந்தது. ஹேமாபாயி தன் விஷயத்தில் கபடமான கருத்தோடு நடந்து வருகிறாள் என்பதை ஷண்முகவடிவு சிறிதும் சந்தேகிக்காமல், அவள் நற்குணம் உடையவள் என்ற எண்ணத்தைக் கொண்டு அவளது சொற்படியே நடந்து வந்தாள். ஆதலால், ஹேமாபாயி அவளது பலஹீனத்திற்கு வைத்தியம் செய்வதாகச் சொல்லிக் கொண்டே அவளுக்கு அதிக ரத்த புஷ்டியையும் அழகையும் உண்டாக்கக்கூடிய ஒளஷதங்களைக் கொடுத்து அவளை அந்தச் சொற்ப் காலத்திற்குள் புது மனுவியாக்கிவிட்டாள்.

ஷண்முக வடிவு அந்த மாளிகைக்கு வந்தபிறகு இருபது நாட்கள் கழிந்தன. தான்.தனது ஊருக்குப் போகவேண்டுமென்ற ஆவலும் ஏக்கமும் அவளது மனதில் கடினத்திற்கு கூடினம் பெருகி வளர்ந்து வதைத்துவந்தன. ஆனாலும், ஹேமாபாயி தான் கமலத்தின் இருப்பிடத்தை அதிசீக்கிரத்தில் கண்டுபிடித்து விட இயலும் என்று அவளிடம் சொல்லி, அவளது நம்பிக்கையைப் பெருக்கிக்கொண்டே வந்தாள். ஆதலால், அவ்வளவு தூரம் வந்து அத்தனை நாளிருந்து தனது அக்காளைப் பார்க்காமல் போவதே தவறென்ற எண்ணத்தினால் அந்த நற் குண மடந்தை அவ்விடத்தில் இருந்துவந்தாள். ஹேமாபாயின் சொற் படி அவள் தனது அத்தை இருந்த இடத்திற்கு ஒரு கடிதமும் பணமும் அனுப்பி வைத்தாள். ஒவ்வொரு நாளும் ஹேமாபாயி வெளியில் போய்விட்டு வந்தாள். ஷண்முகவடிவு தனது அக்காளைப் பற்றி நிரம்பவும் கவலையோடு வினவுவாள். அவள் பற்பல இடங்களைக் குறித்து தான் அந்த இடங்களிலெல்லாம் விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், எப்படியும் சில தினங்களில்