பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பூர்ணசந்திரோதயம்-5 அவளைக்கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறிக்கொண்டே வந்தாள். ஹேமாபாயி தன் மனசில் ஒரு கருத்தை வைத்துக் கொண்டே அவ்வாறு காலஹரணம் செய்துவந்தாள். நிரம் பவும் இளைத்து பலஹlனமான நிலைமையிலிருந்த ஷண்முக வடிவின் உடம்பைத் தேற்றி அவளது தோற்றத்தை நிரம்பவும் வசீகரமானதாகச் செய்தபிறகு தான் தனது கபட ஏற்பாட்டை நிறைவேற்றவேண்டுமென்ற நினைவினாலேயே அவள் அவ்வாறு போக்குக்காட்டி அவளை ஏமாற்றிக் கொண்டு வந்தாள். அந்த யெளவனப் பெண்மணியின் வனப்பு நிரம்பவும் அற்புதமாகத் திரும்பும்படி ஹேமாபாயி செய்ததன்றி, அவள் கடைசியாக நெருப்பினால் தன்னைச் சுட்டுக் கொண்ட அன்றைய தினம் மடத்திலிருந்த கிழவியின் கந்தைப் புடவையால் போர்த்தப்பட்டு வந்தவள் ஆதலால், அவள் ஹேமாபாயியினால் கொடுக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டியது அவசியம்ாப் விட்டது. ஹேமாபாயி எப்போதும் பகட்டான பட்டாடைகளும், வைர ஆபரணங்களும் அணிந்துகொள்ளும் வழக்கமும் உடையவள். ஆதலால், அவள்வுண்முகவடிவிற்கு விலையுயர்ந்த பட்டாடை களையே கொடுத்து அணியச் செய்தாள். அந்த மடந்தை எப்போதும் சர்வ சாதாரணமான எளிய உடைகளையே அணிந்து பழகியவள். ஆனாலும், அவ்விடத்தில் ஏராளமாகக் கிடைத்த உயர்தரப் பட்டாடைகளை ஹேமாபாயியின் தாட்சண்யத் திற்காக அணிய நேர்ந்தது. அந்த மாளிகையில் அவள் எளிய உடைகளை நாடினால் கூட, அவைகள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆகவே, அவள் நிரம்பவும் பகட்டான ஆடைகளை அணிவது அத்யாவசியமாக இருந்தது. அவள் அவ்வாறு டாம்பீகமான ஆடைகளை அணிந்திருந்த காலத்தில் அவளைக் காணும் ஹேமாபாயி ஒரு தாய் தனது மகளின் அழகைக் கண்டு எவ்வாறு ஆனந்தபரவசம் அடைவாளோ அவ்வாறு நடித்து, ‘குழந்தாய்! இந்த ஊர் அரண்மனைக்குள் நான் எத்தனையோ