பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 - - பூர்ணசந்திரோதயம்-5 சொல்லப்பட்டிருப்பதைப் பாருங்கள். சகலமான தர்மமும் அறியாமல் பாதுகாக்கக் கடமைப்பட்டவரான இந்த ஊர் இளவரசர் எவ்விதமாக நடந்துகொண்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள். அவரே அப்படி இருக்கையில் அவருக்குத் தோழர்களாய் இருப்பவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள் என்றார்.

நீலமேகம்பிள்ளை, ‘ஆனால் இதில் நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்டுக் கொள்கிறேன். இந்த உயிலில் எழுதப்பட்டி ருக்கும் விஷயங்களை எல்லாம் நான் யாரிடமும் வெளியிடவில்லை. அப்படி வெளியிடுவதும் உசிதமானதல்ல. உங்களை நான் ஆப்த சிநேகிராக மதித்து உங்களுக்கு மாத்திரம் இதை நான் காட்டினேன். ஆகையால், நீங்கள் இதிலிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை யாரிடமும் வெளியிட வேண்டாம். என் தாயார், இளவரசர், என் தங்கைகள் முதலிய எல்லோருக்கும் பெருத்த இழிவும் பழிப்பும் உண்டாகும். இனி அந்தப் பெண்களிருவரும் அகப்பட்டால் கூட அவர்கள் என்னுடைய சொந்தத் தங்கைகளென்றே நான் சொல்லிக் கொள்ளப்போகிறேன்’ என்றார்.

இன்ஸ்பெக்டர், ‘உங்களிஷ்டம் போலவே நடந்து கொள்ளுகிறேன். இவ்வளவு அந்தரங்கமான விஷயத்தை நான் வெளியிடுவேனா? இது தெரியாவிட்டால், நான் எவ்வளவோ பரம ரகசியமான விஷயங்கள் அடங்கிய இந்தப் போலீஸ் இலாகாவில் உத்தியோகம் பார்த்துப் பெயர் வாங்கி இவ்வளவு காலம் நிலைத் திருக்க முடியுமா? அதைப் பற்றி நீங்கள் சந்தேகப்படவே வேண்டாம்’ என்றார்.

நீலமேகம்பிள்ளை, “சரி; சந்தோஷம். நீங்கள் ஷண்முக வடிவைத் தேடும் காரியத்தை எப்போது முதல் தொடங்கப் போகிறீர்கள்? நானும் உங்களோடுகூட வரலாமா? அப்படி வருவது ஒருவேளை உங்களுக்கு இடைஞ்சலாக இருக்குமோ?” எனறாா.