பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 பூர்ணசந்திரோதயம்-5 பெர்ல் லாங்கை விலக்க முயல்வதைப் பற்றி நான் உம்மை நிரம்பவும் மெச்சுகிறேன். ஆனாலும், நீர் எடுத்துக்கொண்டி ருக்கும் வேலை நிரம்பவும் அபாயகரமானது. ஆகையால், நீர் அந்த விஷயத்தில் தலையிட்டு அநாவசியமானதுன்பங்களுக்கு ஆளாவது என் மனதிற்குப் பிடிக்கவில்லை. நீர் கோலாப்பூர் போவதற்குள்ளாகவே உமக்கு எத்தனையோ இடர்கள் நேர்ந்துவிட்டன. இன்னமும் நீர் பூனாதேசம் போய் பட்டமகிஷியைக் காணுவதற்குள் இன்னமும் பெருத்த மகா பயங்கரமான துன்பங்களும் அபாயங்களும் உமக்கு நேரும். ஆகையால் நீர் அந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். இப்படி நான் சொல்வதிலிருந்து, நான் உமது எதிரிகளின் கட்சியைச் சேர்ந்தவனோ என்ற சந்தேகம் உமக்கு உண்டாகலாம். அவ்வாறு நீர் சந்தேப்படுவது சரியல்ல. கோலாப்பூர் சிறைச்சாலையில் உம்மை எவ்வளவு நீண்ட காலத்திற்கு வேண்டுமானாலும், அந்தப் போலீஸ் கமிஷனர் அடைத்து வைத் திருப்பார். அவ்விடத்திலிருந்து நான் உம்மை விடுவித்து இங்கே அழைத்து வந்ததிலிருந்து நான் எதிரிகளைச் சேர்ந்தவன்அல்ல வென்பதும் உமது நன்மையைக் கருதியே இப்படிச் செய்தேன் என்பதும் சந்தேகமற விளங்கும். உம்மை நான் கட்டாயப்படுத்தி இங்கே அழைத்து வந்ததற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. நீர் செய்ய எத்தனிக்கும் பரோபகாரச் செய்கையைத் தடுப்பதற்காக எதிர்கட்சிக்காரர் உமக்குப் பல வகையான தீங்குகள் இயற்றி உம்மைச் சிறைப்படுத்தியதோடு நிற்காமல், உம்மை மணக்கப் போகிறவளும், மகா நற் குணவதியுமான ஷண்முகவடிவென்னும் பெண்ணை வஞ்சித்து அவள் கோலாப்பூருக்கு வந்தலைந்து பலவகைப்பட்ட துன்பங்களை அனுபவிக்கச் செய்து, அவள் உம்மைப் பற்றி சந்தேகம் கொள்ளும் படியான சந்தர்ப்பத்தை உண்டாக்கியதோடு நிற்காமல், அவளைத் தஞ்சையிலிருக்கும் அவளுடைய அக்காளிடம் அழைத்துக் கொண்டு வருவதாகச் சொல்லி ரகசியமாக இந்த ஊர் வடக்கு இராஜவீதியிலுள்ள மருங்காபுரி