பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பூர்ணசந்திரோதயம்-5 பரோபகாரச் சிந்தையை இவ்வளவோடு அடக்கிக்கொண்டு உமது சொந்தக் காரியத்தை கவனிப்பீரென்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நீர் வேறே எந்த விஷயத்திலும் உமது கவனத்தைச் செலுத்தாமல், இந்தக் கடிதம் கிடைத்த rணம் முதலில் பிரயாசைப்பட்டு ஷண்முகவடிவைத் தேடிப்பிடித்து அவளை அழைத்துக் கொண்டு திருவாரூர் போய்ச் சேர்ந்து அவளை மணந்து சுகமாகக் காலங்கழித்திரும். அப்படி செய்வது தான் நீர் புத்திசாலி என்பதை நிரூபிக்கும்.

இன்னொரு விஷயம்; உமது பகைவர்கள் ஷண்முகவடிவை மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகையில் கொண்டுபோய் விட்டபிறகு அந்த ஜெமீந்தாருடைய மாளிகையில் நெருப்புப் பிடித்துக் கொண்டு ரதிகேளி விலாசமென்ற அவருடைய அக்கிரம ஸ்தானத்தை அழித்துவிட்டதாகவும், ஜெமீந்தார் நெருப்பில் எரிந்து போகும் தருணத்தில் வேலைக்காரனால் மீட்கப்பட்டு நோயாகப் படுத்திருப்பதாகவும் தெரிகிறது. உத்தமியான ஷண்முகவடிவின் வயிற்றெரிச்சலே அவ்வாறு பெரு நெருப்பாக மூண்டு அந்த அசங்கியமான இடத்தையும் அந்தத் துன்மார்க்கங்களையும் சுட்டெரித்துவிட்டது என்பது என்னுடைய அபிப் பிராயம். ஆனால், ஷண்முகவடிவு அவ்விடத்திலிருந்து தப்பிப் போனாளோ, அல்லது நெருப்பில் எரிந்துபோய் விட்டாளோ என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. அந்த விஷயத்தை நீர் அவசரமாகக் கவனித்து, அவள் உயிரோடு இருக்கிறாளா அல்லது இறந்து போனாளா என்பதை முதலில் அறிந்துகொண்டு உயிரோடிருந்தால், எங்கே இருக்கிறாள் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டியது. இந்த விஷயமே உமக்கு மிதமிஞ்சிய பிரயாசையைத் தரும். ஆதலால், நீர் உம்முடைய முழுக்கவனத்தையும் காலத்தையும் இதிலேயே செலவழிக்க வேண்டியது. இதைவிட்டு நீர் இனி பூனாவிலிருப்போர் விஷயத்தில் உம்முடைய கவனத்தைச் செலுத்தினால், இரண்டு காரியங்களில் எதையும் நீர் சாதிக்க