பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 - பூர்ணசந்திரோதயம் - 5 தெரிவித்ததன்மேல், சிவபாக்கியமும் வேலைக் காரியும் அவளைத் தேடுவதற்காகப் புறப்பட்டுத் தஞ்சைக்குப் போயிருப்பார்களோ என்ற யோசனையே ஊர்ஜிதமாகப் பட்டது. அவ்வாறு அவர்கள் போகும்போது, கிழவியைத் தனிமையில் விட்டுப்போக மாட்டாமல் அவளையும் கூடவே வண்டியில் வைத்துக் கொண்டுபோய், தஞ்சையில் எவ்விடத்தி லாவது ஜாகை ஏற்பாடு செய்து அவ்விடத்தில் நோயாளியை இருக்கச் செய்து அவர்கள் வெளியில்போய், ஷண்முகவடிவைத் தேடுவார்களோ என்ற யோசனை தோன்றியது. ஆனால்,அந்த விஷயமே நிச்சயமான தென்ற உணர்ச்சி ஏற்படவில்லை. ஆகையால், தான் அந்தப் பங்களாவின் அண்டையில் ஏதாவது வீடுகள் இருக்கின்றனவா என்று பார்த்து, அங்கிருப்போரிடம் விசாரித்துப் பார்க்க வேண்டுமென்ற ஒரு யோசனை தோன்றியது. ஆகவே, அவன் அவ்விடத்தை விட்டு அந்தப் பங்களாவின்சுற்றுப் பக்கங்களில் போய்ப்பார்த்தான். பக்கத்தில் அதை அடுத்தாற் போல் வீடுகள் காணப்படவில்லை. சிறிது தூரத்திற்கு அப்பால் ஆங்காங்கு இரண்டொரு வீடுகள் காணப்பட்டன. அவன் அவ்விடங்களில் போய் அவற்றில் வசித்தோரைச் சந்தித்து அந்தப் பங்களாவில் இருந்தோர் எங்கு போயினர் என்ற செய்தி ஏதாவது தெரியுமா என்று விசாரிக்க, சிலர் தமக்கு யாதொரு தகவலும் தெரியாதென்றும், வேறு சிலர், அந்தப் பங்களா ஏலத்தில் விடப்படுமென்று திருவாரூரிலும் அவ்விடத்திலும் தண்டோரா மூலமாக யாரோ விளம்பரப் படுத்தியது தங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமென்றும் கூறினர். அதைக்கேட்க, கலியாணசுந்தரத்தின் குழப்பமும் கலவரமும் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்தன. பங்களாவின் சொந்தக்காரர் மூவருடைய அனுமதியுமின்றி எவர்கள் விற்கப் போகிறார்கள் என்று ஐயம் தோன்றியது. ‘நீல லோசனி யம்மாள் பேசமாட்டாமலும் உடம்பை அசைக்க மாட்டாமலும் பகrவாத நோய் கொண்டு படுத்திருந்தாள். கமலம் தஞ்சையில் இருக்கிறாள். ஷண்முகவடிவு காணாமல் போயிருக்கிறாள்.