பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பூர்ணசந்திரோதயம்-5 துரிதமாகச் செல்லத் தொடங்கினான். அவ்வளவு பிரமாதமான கலியாண வைபவத்தில் தனக்கு இளவரசரது பேட்டி கிடைக்குமோ கிடைக்காதோ என்றும் கலியான மண்டபத் தண்டை தான் நெருங்க பாராக்காரர்கள் விடுவார்களோ மாட்டார்களோ என்றும் வேறு பலவாறாகவும் எண்ணமிட்ட கலியாணசுந்தரம், தான் இளவரசரைப் பார்க்க இயலாவிட்டால் அம்மணிபாயியின் உதவியைக் கொண்டாகிலும், தான் தன்னால் இயன்றவரை முயற்சி செய்து பார்க்க வேண்டுமென்று பலவகைப்பட்ட தீர்மானங்கள் செய்து கொண்டவனாய்த் தலைகால் தெரியாது அரண்மனையை நோக்கி ஒடலானான். அம்மணிபாயி என்ற பெயரைத் தான் அதற்குமுன் எவ்விடத்திலோ கேள்வியுற்றிருப்பதாக அவனுக்கு ஒர் எண்ணம் உண்டாயிற்று. ஆனால், அவனது மலக்கலவரத்தில் அந்தப் பெயரைச் சிவபாக்கியத்தினிடம் கேள்வியுற்ற ஞாபகம் உண்டாகவில்லை. ஆகவே, அவன் அம் மணிபாயி தனக்கு உதவியாய் இருப்பாளென்று நினைத்துக் கொண்டு கடுகிச் சென்றான்.

46-வது அதிகாரம்

கற்புடையோர்க்கு மன்னனும் ஒர் அற்ப மசகமே

துதுக்கிழவியான ஹேமாபாயியினால் வஞ்சிக்கப்பட்டு அரண்மனையின் மேல்மாடத்தில் ஓர் அறைக்குள் விடப்பட்ட ஷண்முகவடிவு சோமசுந்தரம்பிள்ளையின் மனைவியாக நடித்த ஸ்திரீயினால் போடப்பட்ட கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்தாள் என்பதும், அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டி ருந்தது என்பதும் முன் ஒர் அதிகாரத்தில் சொல்லப்பட்டி ருக்கின்றன. தனது அக்காளைக் காணலாமென்ற ஆசையோடும் ஆவலோடும் வந்த அந்தப் பெண்மணி மகா விபரீதமான செய்தியைக் கொண்டிருந்த அந்தக் கடிதத்தைப் படிக்கவே,