பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பூர்ணசந்திரோதயம் - 5 கோபம் பாராட்டாமல், இரக்கங் கொண்டு என்னை வெளியில் அனுப்பிவிட வேண்டுகிறேன்’ என்று நிரம்பவும் பணிவாகக் கூறினாள். -

அதைக் கேட்ட இளவரசர் மிகுந்த ஏமாற்றமும், அவமானமும் ஒருவித ஆத்திரமும் பதைபதைப்பும் அடைந்து, அதற்கு மேல் தாம் என்ன சொல்வது என்பதை அறியாமல் சிறிது நேரம் மெளனமாக நின்ற தத்தளித்தார். அவளது அதிமாதுரிய மான சொற்களும், அவள் நின்ற நாணிய நிலையும், பாதாதி கேசம் வரையில் வழிந்து மனதைக் கொள்ளை கொண்ட அவளது தெய்வீகமான எழிலும், ஒன்றுகூடி இளவரசரது மதியை மயக்கி மனதைப் பரவசப்படுத்தி உயிரைக் குடித்தன ஆதலால், எவருக்கும் கிட்டாத அந்த அதிசுந்தர ரூபிணியைத் தாம் நியாயமான வழியில் அடைய இயலாவிட்டால், பலவந்தமாகவாவது எப்படியும் அனுபவித்தே தீரவேண்டு மென்ற ஒர் உறுதி அவரது மனதில் உண்டாயிற்று. அவர் முடிவாக அவளை நோக்கி, ‘பெண்ணே நீ சொல்லுகிற நியாயங்களை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும், இப்போது மேன்மேலும் உன்னோடு வற்புறுத்திப் பேசி உன் மனசைப் புண்படுத்த நான் பிரியப்படவில்லை. இதோடு உன்னைவிட்டு நான் போகிறேன். ஆனாலும், நான் உன்மேல் கொண்ட காதலை மாத்திரம் விலக்க என்னால் முடியவே முடியாது. இன்றிரவு முழுதும் நாளைய பகல் முழுதும் நீ யோசனை செய்து உன் மனசை சமாதானப்படுத்திக்கொள். நாளையதினம் இரவில் நான் மறுபடி உன்னைப் பார்க்கிறேன். எப்படியும் நான் உன்னை அடைந்தே தீருவேன். நீ இனி இவ்விடத்தைவிட்டுப் போகமுடியாது. கிரமப்படி நீ என்னைக் கலியாணம் செய்துகொள்ள இணங்காவிட்டால், நான் உன்னைப் பலாத்காரம் செய்வதுதான் கடைசியான மருந்து. அதற்கு நான் பின்வாங்குவேன் என்று நீ நினைக்க வேண்டாம். இனி நீ தப்பமுடியாதென்பது உன் மனதில் உறுதியாக இருக்கட்டும்” என்று கூறியபின் மெதுவாக அவ்விடத்தை