பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 247 தெரிவித்துக் கலியாணத்திற்குரிய சகலமான ஏற்பாடுகளையும் உடனேநிறைவேற்றி வைக்கும்படிஆக்ஞாபத்து அனுப்பினார். அந்தச் செய்தி பெரிய உத்தியோகஸ்தர்கள் மூலமாய்ச் சிறிய உத்தியோகஸ்தர்கள், சிப்பந்திகள் முதலியோருக்குத் தெரிய, அது அவர்கள் மூலமாய் நகரத்திலுள்ள சகலமான ஜனங் களுக்கும் அதி சீக்கிரத்தில் எட்டியது. நகர முழுதும் ஜனங்கள் ஒயாமல் அதே பிரஸ்தாபமாகப் பேசத்தலைப்பட்டனர். உடனே அரண்மனைப் புரோகிதர் பிரசன்னமாகி முகூர்த்த நாளொன்று ஏற்பாடு செய்தார். விவாக முகூர்த்தப் பத்திரிகைகளும் தயாரிக்கப்பட்டு, அந்தத் தேசத்திலுள்ள சகலமான ஜெமீந்தார் களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் அனுப்பப் பட்டன. தஞ்சைப் பட்டணத்திலுள்ள எல்லா ஜனங்களும் தத்தம் விடுதி களையும் வீடுகளையும் அலங்கரிக்க வேண்டுமென்றும், முகூர்த்தகாலத்தில் அரண்மனையில் விஜயம் செய்திருந்து கலியானத்தைச் சிறப்பித்து அரண்மனையில் விருந்துண்ண வேண்டுமென்றும் நகரமெங்கும் யானைமீது பறை அறைவிக்கப்பட்டது.

இளவரசராலும், பூர்ணசந்திரோதயத்தினாலும், மற்ற எல்லா ஜனங்களாலும் நிரம்பவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட கலியான தினம் வந்து சேர்ந்தது. நகர முழுதும் ஒரே கலியான மண்டபம் போல அலங்காரமே மயமாக நிறைந்து விளங்கியது. வீதிகள் தோறும் ஆகாயத்தை அளாவிய கொட்டகைப் பந்தல்களும், தேர்ச்சீலைகளும், வாழை மரங்களும், தோரணங்களும், ஸரவிளக்குகளும் வால்ஷேட் குளோப்களும் புஷ்ப ஸ்ரங்களுமே மயமாக நிறைந்து போயின. தரை முழுவதையும் கோலங்களும், நடை பாவாடைகளுமே மூடிக் கொண்டன. அதுபோலவே வீடுகள் யாவும் நிரம்பவும் மங்கள கரமாக அலங்கரிக்கப்பட்டதன்றி, ஜனங்கள் எல்லோரும் உயர்ந்த ஆடையாபரணங்களால் தங்களை நிரம் பவும் நேர்த்தியாகச் சிங்காரித்துக் கொண்டு இளவரசரது கலியாணத்