பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பூர்ணசந்திரோதயம் - 5 திருக்கோலம் காணவும், விருந்துண்ணவும் கும்பல் கும்பலாக அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அரண்மனையில் தோற்றமோ சொல்லி அடங்காத மகா புதுமையான அலங்காரமாக இருந்தது. தங்கப் பட்டைகளால் அழகு படுத்தப்பட்ட கம்பங்களும், கோடிக்கணக்கில் தொங்கிய ரஸ்மணிகளும், பெரிய பெரிய ரஸகுண்டுகளும், கண்ணாடி ரதவிளக்குகளும், படங்களும், நிலைக் கண்ணாடி களும், புஷ்பக் குடலைகளை ஏந்திய கந்தருவப் பதுமைகளும், பூமாலைகளை பலவகையான அழகிய பின்னல்களாகப் பிடித்த அப் ஸ்ர ஸ்திரீகளைப் போன்ற பதுமைகளும் சித்திரப் பந்தல்களில் அற்புதமாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. தரை முழுதும் காஷ்மீரத்து ரத்தின கம்பளங்களே மயமாக நிறைந்து அவற்றின் மீது நடப்போரை இன்பசாகரத்தில் ஆழ்த்தின. எங்கு பார்த்தாலும் மேள வாத்தியங்களும் பேரிகைகளும் ஜாம் ஜாமென்று முழங்கிக்கொண்டிருந்தன. அவ்வாறு கண்கொள்ளா வனப் போடு பொலிந்த அரண்மனையின் இடையிலிருந்த கொலு மண்டபமே கலியான மண்டபமாக மாற்றப்பட்டு நவரத்ன சகிதமாக விளங்கியது. வதுவரர்கள் உட்கார்ந்து கலியாணச் சடங்கை நிறைவேற்றுவதற்காக பவழக் கால்களின் மேல் முத்து மாலைகளால் அதிவிநோதமான பந்தல் அமைக்கப் பெற்றிருந்தது. ரோஜா, ஜாதிமல்லிகை முதலிய நறுமணப் புஷ்ப ஜாதிகளாலேயே கொலு மண்டபத்தின் மேல் கூரை அமைக்கப் பெற்றிருந்தது. தம்பதிகளின் முத்துப் பந்தலுக்கு எதிரில் தந்த நாற்காலிகள் ஆயிரக்கணக்கில் வரிசை வரிசையாகப் போடப்பட்டிருந்தன. தரை முழுதும் வெல்வெட்டினாலானதடித்த பீதாம்பரம் பரப்பப் பெற்றிருந்து. ஆகையால், அதன்மேல் நடப்போர் சுவர்க்கலோகம் அதுதானோவென்று சந்தேகித்துப் புளகாங்கிதம் எய்தினர். கொலு மண்டபத்தின்எதிரில் அமைக்கப்பட்டிருந்த ஆகாயத்தை அளாவிய கொட்டகைப் பந்தல் ஒரு பெரிய பட்டணம் போலக் காணப்பட்டது. அங்கு யானைகள், குதிரைகள், காலாட்