பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 - பூர்ணசந்திரோதயம்-5 காலத்தில் பரலோகப் பிராப்தியடைந்த செய்தி தங்களுக்கு எட்டியிருக்குமென்று நினைக்கிறேன். இது அவர்களுடைய மரனாந்த சாசனம். இதைத் தாங்கள் படித்தால், தங்கள் மனம் நிரம் பவும் வருந்துமென்பது நிச்சயம். ஆனாலும், இந்தச் சந்தர்ப்பத்தில் நடக்கும் விபரீதமான காரியத்தைக் கருதி இதைப் படித்துத் தங்களுடைய மனம் கஷ்டப்பட்டாலும், பாதகமில்லை என்று நினைத்தே நான் இதைத் தங்களிடம் கொடுக்கிறேன்’ என்று கூறினார். -

அந்தத் தஸ்தாவேஜி இராமலிங்கம் பிள்ளையின் மரணாந்த சாசனம் என்ற செய்தியை அவர் சொப்பனத் திலும் எதிர்பார்த்தவர் அல்ல. ஆதலால் அதைக் கேட்டவுடன் திடுக்கிட்டு பெருத்த கலக்கமும் கலவரமும் அடைந்தார். அவரது முகம் சடக்கென்று மாறுபட்டது. தமது ஆப்த நண்பரான இராமலிங்கம் பிள்ளைக்குத் தாம் பெருத்த துரோகம் செய்து, அவரது மனைவியைக் கெடுத்து அழித்த ஞாபகம் முழுதும் உடனே அவரது நினைவிற்கு வந்தது. முன்னர் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும் ஒரே காலத்தில் அவரது மனதில் தோன்றி, அப்போது கண்ணிற்கு எதிரில் நடப்பனபோலப் புலப்பட்டன. ஆனாலும், பூர்ணசந்திரோதயம் அந்த விஷயத்தில் எப்படி சம்பந்தப்பட்டிருப்பாள் என்ற விஷயம் மாத்திரம் சிறிதும் தெளிவு படாமலிருந்தது. அவர் அந்த உயிலை வாங்கும்போதே அவரது கைகள் நடுங்கின. உதடுகள் துடித்தன. இருதயம் தடதடவென்று அடித்துக்கொண்டது. தமது தாயைக் கெடுத்துக் கொன்ற துரோகி என்ற விஷயத்தை நீலமேகம்பிள்ளை அந்த உயிலிலிருந்து அறிந்து கொண்டிருப்பார் என்ற நினைவினால், இளவரசர் குன்றிப்போய் நீலமேகம் பிள்ளையின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவும் வெட்கி, குனிந்த தலையை நிமிர்க்காமல் இருந்தபடி அந்த உயிலை வாங்கிப் பிரித்துத் தமக்குள்ளாகவே படிக்கலானார். அவரது கவனம் முழுதும் பழைய விஷயங்க ளிலேயே சென்று லயித்துப் போயிருந்தது. ஆகையால், அதை