பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 293 பதினாயிர மடங்கு அதிக துன்பகரமாக இருந்தது. இளவரசர் தனது தாயை வஞ்சித்து, அவள் இறந்து போனதற்குக் காரணமாக இருந்தவர் என்ற நினைவு அவரிடத்தில் ஒருவித அருவருப்பையும் அச்சத்தையும் உண்டாக்கியது. ஆனால், அவர் தங்களது சொந்தத் தந்தை என்ற நினைவினால் ஒருவித இளக்கமும் ஒருபுறத்தில் உண்டாயிற்று. அதுவுமன்றி, அந்தச் சமயத்தில் அவ்விடத்திற்கு வந்து பெருத்த பஞ்சமாபாதகத்தைத் தாங்கள் செய்யாமல் தடுத்தவராகிய நீலமேகம் பிள்ளை என்பவர் தங்களது தாயின் வயிற்றில் ஜனித்த சகோதரர் என்பதையும், அவரது தந்தையே சோமசுந்தரம்பிள்ளை என்ற மறுபெயரை வைத்துக்கொண்டு கடைசிவரையில் தங்களுக்குப் பணஉதவி செய்துவந்தவர் என்பதையும், இன்னமும் தங்களைக் கடைசிவரையில் காப்பாற்றும் படி அவர் தமது புத்திரருக்கு ஆக்ஞாபித்து இருந்ததையும் உணர்ந்த பூர்ணசந்திரோதயம் அப்படியே உருகிக் கலங்கி பிரமிப்படைந்து தன்னை மறந்து, அண்ணா!’ என்ற வாஞ்சையோடு அழைத்து அதற்குமேலும் ஏதோ கூற யத்தனித்தாள். அவளால் தாங்க இயலாதபடி பிரமாதமாகப் பொங்கி எழுந்த ஒருவித ஆவேசத்தினால், வார்த்தைகள் வெளியில் வராதபடி தொண்டை அடைத்துக் கொண்டது. அவள் உடனே பிரக்ஞை தவறிப்போய்ச் சித்திரத் தேர் சாய்வதுபோலப் பக்கத்திலிருந்த ஸோபாவின் மேல் அப்படியே சாய்ந்துவிட்டாள்.

அதைக் கண்ட இளவரசரும் நீலமேகம்பிள்ளையும் பதறிப் போய்த் துடிதுடித்து அவளண்டை ஒடி அவளை எடுத்து ஸோபாவில் நன்றாகப் படுக்க வைத்தனர். உடனே இளவரசர் பக்கத்திலிருந்த வேறோர் அறைக்கு ஒடி அவளது மயக்கத்தைத் தெளிவிப்பதற்குரிய கருவிகளை எடுத்துக்கொண்டு ஒடோடியும் வந்து அவளுக்குச் சைத்தியோபசாரம் செய்து சிறிது நேரத்தில் அவளைத் தெளிவித்தார். தனது கண்களைத் திறந்து விழித்துக்கொண்டு பார்த்த பூர்ணசந்திரோதயம் தனது இரு