பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 பூர்ணசந்திரோதயம் -5 தேர்ந்தெடுத்து விட்டேன். இதோ இருக்கும் இந்த ரrாமிர்தம் ஜெமீந்தார் குபேர சம்பத்துடையவர். யெளவன பருவம், அழகு, புத்திசாலித்தனம்,நற்குணங்கள், சிரேஷ்டமான நடத்தை முதலியவற்றிற்கு இருப்பிடம் போன்றவர். அவரும் உங்களுடைய ஜாதியைச் சேர்ந்தவர். அவருக்கு இன்னமும் கலியாணமாகாமல் இருக்கிறது. அவரோடு நான் தனியாகப் பேசி அவர் கமலத்தைக் கலியாணம் செய்துகொள்ள இணங்கும்படி செய்கிறேன். இவருக்கும் இதே முகூர்த்தத்தில் கலியாணம் நடத்திவிடுவோம். இவர்கள் இருவரும் உம்முடைய தகப்பனாரின் மூத்த சம்சாரத்தின் குழந்தைகள் என்றும், அவருடைய மூத்த சம்சாரம் இறந்தவுடன் இளைய சம்சாரத்திற்காகப் பயந்து இவர்களை அவர் திருவாரூருக்கு அருகில் ரகசிய இாக வைத்திருந்தார் என்றும், அந்த விவரம் உமக்கு இதுவரையில் தெரியாதிருந்தது என்றும், இப்போது உம்முடைய தகப்பனார் இறந்தபிறகு அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்த ஒரு தஸ்தாவேஜியிலிருந்து அந்த விபரம் உமக்குத் தெரிந்தது என்றும் நாம் ஒருவிதமாக இந்த ரrாமிர்தம் ஜெமீந்தாருக்கும், கலியாணசுந்தரத்திற்கும் சொல்லி விடலாம். இதனால் எனக்கும் உமக்கும் உம்முடைய தாயாருக்கும், இந்தப் பெண்களுக்கும் யாதொரு அவமானமும் பழிப்பும் இல்லாமல் போகும். நான் போய் ஜனங்களுக்கும் திருப்திகரமான சமாதானம் சொல் லிவிடு கிறேன். இந்த ஏற்பாடு உமக்குச் சம்மதமாக இருக்கிறதல்லவா?’ என்றார்.

அதைக்கேட்ட நீலமேகம்பிள்ளை சிறிதுநேரம் யோசனை செய்து முடிவில் அதை ஒப்புக்கொண்டார்.

உடனே இளவரசர், “சரி; சந்தோஷம். நான் இந்த ரrாமிர்தம் ஜெமீந்தாரோடு தனியாகப் பேசி இவர் சம்மதிக்கும் படி செய்கிறேன். நீர் இப்படியே பின்பக்கமாகப் போய் எவனையாவது பாராக்காரனைக் கொண்டு கலியாணசுந்தரம் பிள்ளை இருக்கும் இடத்தைக் காட்டச்செய்து, அவரை