பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - - 331 கலியாணச் சடங்குகள் யாவும் நிறைவேறியபின், தம்பதிகளின் கங்கண விசர்ஜனம் செய்யப்பட்ட காலத்தில் இளவரசர், நீலமேகம் பிள்ளை முதலியோர் கலியான மண்டபத்திற்கு அருகில் வீற்றிருந்து புரோகிதர் முதலியோருக்கு சம்பாவனை வழங்கிக் கொண்டிருந்த தருணத்தில் அந்த ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீரென்று அவர்களுக்கு எதிரில் தோன்றி இளவரசரை வணங்கி நிரம்பவும் பணிவாகப் பேசத் தொடங்கி, ‘மகாராஜாவே மாப்பிள்ளைகளில் ஒருவருக்கு நான் ஒர் அவசர சங்கதி கொண்டு வந்திருக்கிறேன். ஆனால், இப்போது முக்கியமான இந்தப்பெரிய சுபகாரியம் முடிந்து தாங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது அந்தச் செய்தியைச் சொல்ல, எனக்கு அச்சமாக இருக்கிறது. ஆனால், அதைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை’ என்று நயமாகக் கூறினார். அதைக் கேட்ட இளவரசரும் புதிய தம்பதிகளும் மற்ற எல்லோரும் திடுக்கிட்டு ஒருவித திகிலும் கலக்கமும் அடைந்து இன்ஸ்பெக்டரது முகத்தை உற்று நோக்கினர். உடனே இளவரசர் இன்ஸ்பெக்டரைப் பார்த்து, ‘ஐயா இன்ஸ்பெக்டரே! உம்முடைய நற்குணங்களையும், உத்தியோகத் திறமையையும் பற்றி நான் பல மனிதர் களிடம் கேள்வியுற்றிருக்கிறேன். கடைசியாக இந்தக் கலியாணப் பெண்களுள் ஒருத்தியான ஷண்முகவடிவென்னும் பெண்ணுக்கு நீர் செய்த உதவியைப் பற்றி நான் கேள்விப்பட்ட பின், உம்மை அழைத்து நேரில் பேசி உமக்குத் தக்க மரியாதை செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டி ருந்தேன். நல்ல வேளையாக நீரே வந்தீர். ஆனால், இந்த சுபவேளையில் ஏதோ அபவார்த்தை சொல்ல வந்திருக்கிறீர் போலத் தோன்றுகிறது. யாராவது இறந்து போய் விட்டார்களா? அப்படி இருந்தாலும் பாதகமில்லை; பயப்படாமல் வெளியிடும்” என்றார்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர், ‘இன்னம் இறக்கவில்லை. ஆனால், இன்னம் இரண்டொரு நாழிகை நேரத்திற்குள் இறந்து