பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வளவோடு நாம் இந்தக் கதையை நிறுத்தி இதில் வந்த முக்கியமான சிலரின் முடிவைத் தெரிவிப்போம். கலியான சுந்தரம், ஷண்முகவடிவு, இளவரசர், கமலம், நீலமேகம் பிள்ளை முதலியோர் உடனே புறப்பட்டு மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகையை அடைந்தனர். ஆனால் அதற்குள் மருங்காபுரி ஜெமீந்தார் இறந்து போய்விட்டார். ஆதலால், அவர் பெண்டாள நினைத்த ஷண்முகவடிவு, கமலம் ஆகிய இருவரது முகத்திலும் விழிப்பதான அவமானம் அவருக்கு இல்லாமல் போயிற்று. இளவரசர் கூடவே இருந்து அவரது அந்தியக் கிரியைகளை நிரம் பவும் விமரிசையாகவும் சிறப்பாகவும் நடத்தி வைத்து ஒரு குபேரனது சம்பத்துக்கு ஒப்பிடத் தக்க சகலமான ஐசுவரியங்களுக்கும் சமஸ்தானத் திற்கும் கலியாணசுந்தரம் ஷண்முகவடிவு ஆகிய இருவரையும் உரியவர்களாக்கி, அவர்கள் இந்திரன் இந்திராணி போல இருக்கும்படி செய்துவிட்டுத் திரும்பி வந்தார். அதுபோலவே கமலமும் ரக்ஷாமிர்தம் ஜெமீந்தாரும் ரதியும் மன்மதனும்போல எப்போதும் சல்லாபித்துக் கொண்டு உல்லாச தம்பதிகளாயிருந்து வந்தனர்.

இளவரசர் தமது துர்க்குணங்களையும், காமாந்தகார மனப் போக்கையும் விடுத்துப் பெருந்தன்மையும், தர்ம சிந்தனையும் வாய்ந்தவராக மாறி மறுபடியும் தமது பட்டமகிஷியை அழைத்துக் கொண்டு அவளோடு சந்தோஷமாகக் காலம் கழித்ததன்றி, அடிக்கடி தமது பெண்களான கமலத்தையும், வுண்முகவடிவையும் பார்த்து ஒப்பற்ற ஆனந்தம் எய்தி வந்தார். நீலமேகம் பிள்ளையும் அதுபோல அடிக்கடி தனது தங்கை மார்களைப் பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைந்தவராய்க் காலங் கழித்து வந்தார். லீலாவதி தமது மருமகப் பிள்ளையின்