பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 337

தங்கை என்பதைக் கருதி இளவரசர் சிறைச்சாலையிலிருந்த அவளது புருஷனான மாசிலாமணிப்பிள்ளையை விடுவித்து, கலியான சுந்தரம் அவர்களிருவருக்கும் பெருத்த செல்வத்தை அளிக்கச் செய்ய அவர்களிருவரும் பழைய மனக்கசப்பை மறந்து, ஒருவரிடத்தொருவர் அந்தரங்கமான பிரியம் வைத்து வாழ்ந்து வந்தனர். சதியாலோசனைக் காரர்களான அம்மணி பாயி, சாமளராவ், அன்னத்தம்மாள், அவளது பெண்கள், ஹேமாபாயி முதலிய வஞ்சகர்களெல்லோரும் நிரம்பவும் கொடுமையான தண்டனை அடைந்து முடிவில் நல்ல புத்தியடைந்து நல்ல வழியில் நடந்து வந்தனர். ஏராளமான கொலைகளையும் கொள்ளைகளையும் நடத்திவந்த பரம துஷ்டனான கட்டாரித் தேவன் மரணதண்டனை அடைந்தான்.

ஷண்முகவடிவு சொன்ன அடையாளத்தைக் கொண்டு போலிஸ் இன்ஸ்பெக்டர் கபடசன்னியாசியைக் கண்டுபிடித்து, அவனைப் பல வருஷகாலம் கடினக்காவல் தண்டனை அடையும்படி செய்துவைத்தார். கலியாணசுந்தரம் சிவபாக்கி யத்தைத் தக்க இடத்தில் கலியாணம் செய்து கொடுத்து ஏராளமான செல்வமும் உதவி, அவளது நற் குணத்திற்குத் தக்கபடி அவளை உயர்வான பதவியில் வைத்து சன்மார்க்கத்தில் திருப்பி விட்டான்.

நீலலோசனியம்மாள் பகrவாதநோய் தீர்ந்து மாறிமாறிக் கமலத்தினிடத்திலும் ஷண்முகவடிவினிடத்திலும், நிரம்பவும் பூஜிதையாக இருந்து வந்தாள். எத்தனையோ அரிய காரியங்களை முடித்த மகா திறமைசாலியான போலீஸ் இன்ஸ்பெக்டரை இளவரசர் மறக்கவில்லை. அவருக்கு ஒரு பெருத்த சமஸ்தானத்தைச் சன்மானமாகக் கொடுத்து, அவரைத் தஞ்சை நகரத்தின் போலீஸ் கமிஷனர் பதவிக்கு உயர்த்த, அவர் முன்னிலும் பன்மடங்கு அருமையான காரியங்களைச் செய்து பெருத்த கீர்த்திவானாக விளங்கினார். கலியாணபுரம் மிட்டாதார், சேரங்குளம் இனாம்தார், சூரக்கோட்டைப்