பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 பூர்ணசந்திரோதயம்-5 பாளையக்காரர் முதலியோர் பூர்ணசந்திரோதயத்தின் உண்மை வரலாற்றையும் அவள் முடிவில் ரrாமிர்தம் ஜெமீந்தாரை மணந்து rேமமாக இருப்பதையும் கேட்டு ஆச்சரியமடைந்த தன்றி, இளவரசரது உதாரணத்தைப் பின்பற்றி நற் குண புருஷர்களாக மாறிப்போயினர். -

பஞ்சண்ணாராவ், ராமன் முதலியோர் அரண்மனையில் கண்ணியமான உத்தியோகங்களில் அமர்த்தப்பட்டு நல்ல வழியில் உபயோகப்பட்டு வந்தனர்.

பூனாவிலிருந்து திரும்பிவந்து இளவரசரை அடைந்த பட்டமகிஷியான லலிதகுமாரி தேவி, யாதொரு கைம்மாறும் கருதாமல் தனது விஷயத்தில் காருண்யம் பாராட்டித் தனக்கு நேர இருந்த இடரை விலக்கமுயன்ற உண்மைப் பரோபகாரி ff@ கலியாணசுந்தரத்தை ஒருநாளும் மறக்காமல், அவன் பெண்டு பிள்ளைகளோடு அமோகமாக ஆயிரங்காலம் வாழ வேண்டுமென்று சதா காலமும் சர்வேசுவரனை ஸ்தோத்திரம் செய்து கொண்டே மங்களகரமாக இருந்து வந்தாள். தஞ்சை வாசிகள் இப்போதும் உயர்வான குணம், பேரழகு, பரோபகார சிந்தை, புருஷர் பெண்ஜாதி ஒருவருக்கொருவர் காட்ட வேண்டிய வாஞ்சை முதலிய உத்தம குணங்களுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், ரrாமிர்தம் ஜெமீந்த்ார், மருங்காபுரி ஜெமீந்தாராகிய கலியாணசுந்தரம், கமலம், ஷண்முகவடிவு ஆகிய நால்வரையே குறித்து அடிக்கடி புகழ்ந்து பேசுவதை நாம் இப்போதும் கேட்கலாம்.

உலகத்தில் நற் குணத்தினாலும் நன்னடத்தையினாலும் அடையக் கூடாதது ஒன்றுமில்லை. ஆகையால், நமது கதாநாயகர் கதாநாயகிகள் அத்தகைய பெரும் புகழையும், குரேப சம்பத்தையும் அடைந்ததும், பிறந்தது முதல் நாற்பத்தைந்து வயதுகாலம் வரையில் துன்மார்க்கத்திலேயே சென்று கொண்டிருந்த இளவரசரைப் பரிசுத்தமான