பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 39 தண்டனைக்கு ஆளாக்கி இருக்கின்றனவோ என்ற எண்ணமும் அப்போதைக்கு அப்போது அவரது மனதில் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. துன்மார்க்கத்தில் பிரவேசிக்கும் மனிதர் எவ்வளவோ முன் யோசனையோடு நிரம்பவும் புத்திசாலித் தனமாக நடந்துகொண்டாலும், அவர்கள் எப்படியும்துன்பத்தில் அகப்பட்டு உழல நேரும் என்ற நினைவும், பிறர்க்குச் செய்ய நினைக்கும் தீங்கு தம்மை ஒருநாளும் விடாமல் எப்படியும் பழிக்குப்பழி வாங்கிவிடுமென்ற நினைவும் அவரது மனதில் பிடிவாதமாக எழுந்தெழுந்து மறைந்து கொண்டிருந்தன.

அவ்வாறு அவர் தமக்குத்தாமே உண்டாக்கிக்கொண்ட நரக வேதனையில் ஆழ்ந்து உழன்று தீயில் கிடந்து தவிக்கும் புழுவைப் போலத் தத்தளித்து வெகுநேரம் வரையில் துடிதுடித்திருக்க, அவரது உடம்பின் ஸ்மரணை படிப்படியாகத் தவறிக்கொண்டே போயிற்று. மூளையின் அறிவொளி குறைந்து இருளடையத் தொடங்கியது. சிறிது நேரத்தில் அவர் மூர்ச்சித்து

அப்படியே நாற்காலியில் பிணம்போலச்சாய்ந்து விட்டார்.


பொழுது விடிந்தது. அந்த மாளிகையிலிருந்த வேலைக் காரர்கள் வழக்கம் போலத் துயில் நீத்தெழுந்து தத்தம் அலுவல்களைக் கவனிக்கலாயினர். அவர்களெல்லோரும் கீழ்க் கட்டிலேயே படுத்துத் தூங்குவது வழக்கம். ஆதலால் முதல் நாளிரவு மேன்மாடத்தில் நடந்த விஷயங்களை அவர்கள் வெகுநேரம் வரையில் தெரிந்துகொள்ளாமலேயே இருந்தனர். ஜெமீந்தாரும் லீலாவதியும் ஷண்முகவடிவு என்ற பெண்ணைக் கொணர்ந்து வைத்துக்கொண்டு மேன்மாடத்தில் பலாத்காரம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மாத்திரம் அவர்கள் எளிதில் யூகித்துக்கொண்டார்கள். ஆதலால், அவர்கள் மூவரும் இரவு முழுதும் கண்விழித்துக் கூத்தடித்துவிட்டு அலுத்துத் தூங்குகிறார்கள் என்றும் அவர்களே விழித்தெழுந்து வருகிற வரையில் தாங்கள் போய் அவர்களை எழுப்பக் கூடாது என்றும்