பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பூர்ணசந்திரோதயம் - 5 இரவோடு இரவாக அவளை அபகரித்துக்கொண்டு வந்துவிட வேண்டுமென்றும் ஜெமீந்தாரும் லீலாவதியும் நிச்சயித்துக் கொண்டனர். அத்தனை துன்பங்களிலும் கவலைகளிலும் ஜெமீந்தாருக்கு ஷண்முக வடிவின் நினைவே பெருத்த பைத்தியமாகப் பிடித்துக்கொண்டது. அவளது விஷயத்தில்தாம் மறுபடி முயற்சி செய்வதில், தம்மிடம் மிகுதியிருக்கும் நிலங்கள் முதலிய சகலமான செல்வத்தையும் இழப்ப தானாலும், தாம் பின்வாங்கக் கூடாது என்ற உறுதியே அப்போதும் அவரது மனதில் உண்டாயிற்று. துன்மார்க்கத்தில் தமது மனதைச் செலுத்திப் பழகிய மனிதர்கள், இடையில் தமக்கு எவ்வித அபாயங்களும் மானஹானியும் நேர்ந்தாலும் அவைகளை வெகு சீக்கிரத்தில் மறந்து, தமது மனப்போக்கின் படியே செல்வர் என்பது பிரத்தியகடிமான விஷயமாதலால், அதே இனத்தில் சேர்ந்த மருங்காபுரி ஜெமீந்தார்.அவ்வாறு உறுதி செய்துகொண்டது ஆச்சரியகரமான விஷயமல்ல. ஆனால் லீலாவதியோ எனில், ஷண்முகவடிவின் விஷயத்தில் தாம் பெருத்த அக்கிரமம் செய்ததனாலேதான் தங்களுக்குப் பெருத்த அபாயமும் அபாரமான பொருள் நஷ்டமும் ஏற்பட்ட என்பதை பலமாக உணர்ந்தாள். ஆனாலும், தனது பெரிய தந்தைக்குக் கட்டுப்பட்டு அவரது மனப்போக்கின்படி நடந்து கொள்ள வேண்டியவளாக இருந்தாள். ஆகவே, அவள் தன் மனதிற்கு விரோதமாகவே அவரது அநியாயச் செய்கை களுக்கும், கெடு நினைவுகளுக்கும் ஒருப்பட்ட வளானாள்.

லீலாவதியைக் கண்டு அவளது செய்கைகளை எல்லாம் கேட்டு மறுபடி தாம் ஷண்முகவடிவை எப்படி அபகரித்து வருவது என்பதைப்பற்றி முடிவுசெய்த பிறகு ஜெமீந்தார் ஒரு யானையின் பலத்தைக் கொண்டவர் போலானார். அவர் சாதாரணமாக எழுந்து தமது போஜனத்தை முடித்துக் கொண்டார். கோவிந்தசாமியிடம் சில விவரங்களைத் தெரிவித்து, ஷண்முகவடிவைத் தேடும்படி அந்த ஊருக்