பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 61

அதைக்கேட்ட லீலாவதி, முற்றிலும் திகிலும் கலக்கமும் நடுக்கமும் கொண்டவளாய், ‘ஐயா என்னை விட்டுவிடும். உமக்கு நான் அநந்தகோடி நமஸ்காரம் செய்கிறேன். ஸ்திரீ புருஷர் ஆகிய இருவரும் மனமொத்து இணங்கிச் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தில் விருப்பமில்லாத என்னை இப்படி வற்புறுத்துவது ஒழுங்கல்ல. என் உயிர் போவதானாலும், நான் உம்முடைய பிரியத்திற்கு இணங்கிவர முடியாது. நீர் என்னைக் கொண்டுபோய்ச் சிறைவைத்திருந்த இடத்திலிருந்து நான் வந்ததிலிருந்தே எனக்கு இந்த விஷயம் சம்மதியாக இருக்க வில்லை என்பது தெரியவில்லையா? மறுபடியும் வந்து என்னை ஏன் இப்படி உபத்திரவிக்கிறீர்? தயை செய்து என்னை விட்டுப் போய்ச் சேரும். நீர் எங்களுடைய பெட்டியிலிருந்து ஏராளமான ஐசுவரியத்தை அபகரித்துக்கொண்டு போனதோடு திருப்தி அடையும். உம்முடைய வீட்டின் அடையாளமும், அது இருக்கும் தெருவின் பெயரும் எனக்கு நன்றாகத் தெரியும். போலிசாரை ஏவி உம்மைப் பிடித்துக்கொள்ளுவது @a)L_flf)fs@T காரியமாக இருந்தும், நாம் அப்படிச் செய்யப் பிரியப்பட வில்லை, ஏனென்றால் நீர் இதற்குமுன் பல தடவைகளில் என் புருஷருக்கு உதவியாயிருந்தவர் என்பதைக் கருதியே நான் அப்படிச் செய்ய எண்ணவில்லை. ஆகையால், நீரும் பழைய பழக்கத்தையும் மரியாதையையும் கருதி, இவ்வளவோடு என்னை விட்டுவிடும். நீர் கொண்டு போயிருக்கும் பெரும் செல்வத்தைக் கொண்டு நீர் என்னைக் காட்டிலும் சிரேஷ்டமான எத்தனையோ பெண்களை அடையலாம். ஆகையால் தயை செய்யும் , வேண்டாம்; நீர் சகலமும் தெரிந்த பெரிய மனிதர். உமக்கு நான் அதிகமாகச் சொல்லக்கூடியது ஒன்றுமில்லை’ என்று நிரம்பவும் இரக்கமாகவும் இளக்கமாகவும் கூறிக் கெஞ்சி மன்றாடினாள்.

கட்டாரித்தேவன் ஏளனமாக நகைத்து, “ஆகா! எவ்வளவு சாமர்த்தியசாலியான பெண்ணப்பா இவள், நேற்று தினம் நீ

“;u,: