பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பூர்ணசந்திரோதயம் - 5 போய்விடுவேனென்று எண்ணிக் கொண்டாயா? அல்லது நூறு மனிதர்கள் உனக்கு உதவி செய்யவந்தால்கூட நான் உன்னை விட்டுப் போவேனென்று நினைக்கிறாயா? அது ஒருநாளும் பலியாது. இனி வாயைத் திறந்து கூச்சலிடுவாயானால், இந்தக் கத்தியை ஒரே பாய்ச்சலாக உன் மார்பில் பாய்ச்சி விடுவேன்; பத்திரம்’ என்று கூறிய வண்ணம் அவள் மறைந்திருந்த பூச் செடியண்டை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். அவனது சொற்களைக் கேட்டலீலாவதி நடுங்கிப் போய்த் தனது கூச்சலை நிறுத்திவிட்டு, ‘ஐயா! அப்படியே நில்லும்; அப்படியே நில்லும்; என் பக்கத்தில் வரவேண்டாம். உமக்கு நிரம்பவும் புண்ணியமுண்டு. நான் இனி கத்தவில்லை’ என்று நிரம்பவும் பணிவாகவும் நயமாகவும் கெஞ்சி மன்றாடத் தொடங்கினாள்.

அதைக் கேட்ட கட்டாரித்தேவன் சிறிது சாந்தமடைந்த வனாய்ப் புன்னகை செய்து, “சரி; அதுதான் புத்திசாலிக்கழகு. ஆனால் நீ உண்மையில் புத்திசாலியா, இல்லையா என்பது மாத்திரந்தான் சந்தேகமாக இருக்கிறது. நான் கத்தியால் குத்தாமல் இருக்க வேண்டுமென்று நீ கத்தாமல் இருப்பதாகச் சொல்வது நியாயமான விஷயமே. நான் உனக்குப் பக்கத்தில் வராமல் துரத்திலேயே நிற்க வேண்டுமென்று நீ கட்டளையிடு கிறாயே, அது நடக்கக்கூடிய காரியமா? உன்னிடம் நெருங்கக் கூடாதென்று நான் நினைத்தாலும் என் மனம் கட்டுப்படுமா? என் உடம்புதான்நிலையில் நிற்குமா? கொஞ்சநேரம் நீ எனக்குத் தந்த அற்புதக் காட்சியைக் கண்ட பிறகு, இனி மும்மூர்த்திகள் வந்து தடுத்தாலும், இந்த தேகம் அடங்குமா? அது ஒருநாளும் பலியாதகாரியம். இப்போது நான் உன்னை அடைய வேண்டும். அல்லது, இன்றோடு என் உயிர் அழிய வேண்டும். இரண்டில் - ஒன்றே முடிவான காரியம். இந்த முடிவை ஈசுவரனும் மாற்றமுடியாது. பேசாமல் இப்படி வந்துவிடு. அநாவசியமாக உடம்பை அலட்டிக் கொள்ளாதே’ என்று உறுதியாகவும் அழுத்தமாகவும் கூறினான்.