பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் G5. துரைசாமி ஐயங்கார் 3 உண்டென்று அதற்கு முன்பே ஒருவித சந்தேகம் கொண்டிருந்தார். ஆதலால், அவர் உடனே உண்மையை யூகித்து அறிந்துகொண்டவராய் என்னிடம் வந்து என்னை எவ்வளவு கொடுமையாக நடத்தினார் தெரியுமா? அதன்பிறகு அந்தப் பிரேதத்தை எடுத்து அதே பங்களாவின் பின்புறத் தோட்டத்தில் அடக்கம் செய்வதற்குள் அவர் படுத்தி வைத்த பாடு ஈசுவரனுக்கே தெரியவேண்டும். பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட குழியில், அவர் ஏறிவந்த நூலேணியும் வைத்துப் புதைக்கப்பட்டிருக்கிறது. அவரைப் புதைத்த பிறகு என் புருஷர் நான் செய்த அந்தக் குற்றத்தை மன்னிப்பதாகச் சொல்லி, அதற்குப் பதிலாக, என்னை எப்படிப்பட்ட கேவலமான காரியங்களை எல்லாம் செய்யச் சொன்னார் தெரியுமா? உங்கள் தகப்பனார் விஷயத்தில் நான் என் கற்பை இழந்த தவறுக்கு நான் மகா கொடிய தண்டனைகளை எல்லாம் அனுபவித்தாய் விட்டது. இனி ஒன்றும் மிச்சமே இல்லை. என் புருஷர் என் விஷயத்தில் செய்த அக்கிரமங்களை வாயில் வைத்துச் சொல்லவும் எனக்குக் கூசுகிறது” என்றாள்.

நீலமேகம்பிள்ளை, “ஒகோ இப்போதுதான் உண்மை ஒரு மாதிரியாக விளங்குகிறது. உங்கள் புருஷர் உங்களை அவ்வளவு கொடுமையாக நடத்தி வதைத்தபடியால்தான் நீங்கள் நியாயாதிபதிக்குக் கடிதம் எழுதி அவரைக் காட்டிக் கொடுத்தீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அவர் எப்படிப்பட்ட இழிவான காரியத்துக்கும் துணியக்கூடிய மகா துஷ்ட மனிதரென்பதும் தெரிகிறது’ என்றார். -

லீலாவதி நிரம் பவும் ஆக்கிரோஷமும் பதைபதைப்பும் அடைந்தவளாய், ‘ஆம் ஆம்; உண்மைதான். அவர் என்னை வேறு எந்த விதத்தில் உபத்திரவித்திருந்தாலும், அல்லது, அவர் என்னை வைது அடித்து, உதைத்துச் சித்திரவதை செய்திருந்தாலும் நான் அவர் மேல் அவ்வளவு ஆத்திரம்