பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 69 படேரென்று வீழ்ந்து விட்டாள். அதைக் கண்ட ஜெமீந்தார் பதறிப் போய், ‘'அடே கொலை பாதகா அநியாயமாக என்னுடைய பெண்ணைக் கொன்றுவிட்டாயடா படுபாவி! நேற்றையதினம் வந்து நீ செய்த அட்டுழியம் போதாதென்று இன்றைய தினமும் திரும்பி இங்கே வந்தாயா?” என்றார்.

அவரது வார்த்தைகளைக் கேட்ட கட்டாரித்தேவன் ஏளனமாகப் புன்னகை செய்து, ‘ஆமையா நீரும் நானும் பழைய சிநேகிதர்களல்லவா? உம்முடைய வீட்டுக்கு நான் எத்தனை தரம் வந்தாலும் அது குற்றமாகுமா?’ என்றான்.

அதைக் கேட்ட ஜெமீந்தார் அளவற்ற கோபம் கொண்ட வராய், “அடே திருட்டுநாயே! யாரைப்பார்த்து இப்படிப்பட்ட வார்த்தைகள் சொல்லுகிறாய்! நீ கேவலம் வழிப்பறி நடத்தும் திருடன். நீயும் நானும் சிநேகமாவதாடா?’ என்றார்.

உடனே கட்டாரித்தேவன் முன்னிலும் அதிக ஏளனமாக நகைத்து, ‘எஜமானருக்கு ஏழைமேல் இவ்வளவு கோபம் உண்டாகக் காரணமென்ன? உங்களுடைய ரகசியங்களெல்லாம் அடங்கிய நோட்டுப் புஸ்தகத்தை இழந்து நீங்கள்தவித்தபோது, உங்களுக்கு உதவி செய்தது, இந்தத் திருட்டு நாயல்லவா? நீங்களும் இளவரசரும் அம்மன்பேட்டைக்குப் போய்த் திரும்பி வந்த காலத்தில் உங்களை வழிமறித்துக் கொண்டுபோனது நாங்கள்தான். ஆனாலும், உங்களை அப்படிக் கொண்டுவரச் சொன்னது உங்களுடைய மருமகப் பிள்ளையும் மகளுமேயன்றி, அதை நாங்களே செய்யவில்லை. அதன்பிறகு நோட்டுப் புஸ்தகத்தை இவ்விடத்தில் கொண்டுவந்து சேர்த்ததும் உங்கள் மகளே. அப்படியிருக்க வழிப்பறி செய்த திருட்டு நாய் இன்னார் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அதைத்தவிர இன்னும் எத்தனையோ விஷயங்களில் உங்கள் மருமகப் பிள்ளைக்கும், மகளுக்கும் நான் உதவி செய்திருக்கிறேன். அவர்கள் செய்த ஒரு பெருத்த கொலையை மறைத்து பிணத்தைப் புதைக் கும் விஷயத்தில் நான் எவ்வளவோ