பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 85 என்னிடத்திலிருந்து அபகரித்துக்கொண்டு போவதற்கும், எனக்குக் கெடுதல் செய்வதற்கும் முயற்சிப்பாய். ஆகையால், உன்னை இன்றோடு தொலைத்துவிட்டால், அவள் நாதியற்றவளாய் இனி ஒருநாளும் என்னைவிட்டு எங்கேயும் போகமாட்டாள். ஆகையால் நீ இவ்விடத்திலேயே இரு. நீயும் உன்னுடைய மாளிகையும் இதிலுள்ள அற்புதமான அலங்காரப் பொருள்களும் அடியோடு சாம்பலாகப் போகக்கூடிய வழியை நான் வெகு சீக்கிரம் தேடுகிறேன். நீ இதுவரையில் செய்த அக்கிரமங்களும், பாபங்களும் இன்றோடு தொலையட்டும்” என்று கூறிய வண்ணம் அவ்விடத்தைவிட்டு, சிறிது தூரத்தில் லீலாவதி மயங்கிக் கிடந்த இடத்திற்குப்போய், துணிகளால் அவளது கைகால்களைக் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்து அவளைத் தூக்கித் தோளில் சார்த்திக்கொண்டு, அருகில் இருந்த விளக்கைக் கையிலெடுத்து அதன் கண்ணாடியை விலக்கி விட்டு, நாற்புறங்களிலிருந்த கட்டில்களி லிருந்த மெத்தைகள் தலையணைகள் முதலியவற்றில் பல இடங்களில் பற்ற வைத்துவிட்டு, அந்த விளக்கையும் லீலாவதியையும் எடுத்துக் கொண்டுபோய், வெல் வெட்டு மாடத்தில், பல இடங்களில் நெருப்பைக் கொளுத்திவிட்டுக் கீழே இறங்கிப் போய், அடிக்கட்டிலும் பல இடங்களில் நெருப்பை வைத்துக் கொளுத்திவிட்டு விரைவாக வெளியில்

போய்விட்டான்.

தாம் அருமையாகச் சேர்த்துவைத்திருந்த கொக்கோ லீலை மஞ்சங்களில் எல்லாம் அவன் நெருப்பு வைத்ததைக் கண்ட ஜெமீந்தார் சகிக்கவொண்ணாத பெருத்த திகிலும் கலக்கமும் அடைந்து பலவாறு கூச்சலிட்டுக் கதறிப் புலம்பிப் பரிதவித்து நிரம்பவும் நயமாகவும், பணிவாகவும் கட்டாரித்தேவனிடம் மன்றாடிப் பார்த்தார். அவன் அதைச் சிறிதும் காதில் வாங்காமல் மேலே குறித்தபடி தனது வேலையைச் செய்துவிட்டு வெளியில்போய்விட்டான். அவன் அந்த வீதியின் கடைசிக்குப்