பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 5 உங்களுக்கும் என் தகப்பனாருக்கும் சிநேகம் ஏற்பட்டதோ, இனி நான் உங்களை என்னுடைய தாயாக மதிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்மேல் நீங்கள் எவ்வளவு ஆழ்ந்த பிரியம் வைத்திருந்தீர்கள் என்பதை நான் உங்களுடைய கடிதத்திலிருந்து நன்றாக அறிந்து கொண்டிருக்கிறேன். அவர் இறந்தபோனதைப்பற்றி உங்கள் மனம் எப்பாடு படும் என்றும் நன்றாகத் தெரிகிறது. அதன் உண்மையை நான் இப்போது என் கண் முன்பாகவே காண்கிறேன். அப்படியிருக்க இந்த நிலைமையில் நான் என்னலான உதவியைச் செய்து உங்களுடைய துயரத்தைப் போக்கி உங்களுக்கு எவ்வித அவமானமும் தூஷணையும் உண்டாகாமல் தடுப்பதே ஒழுங்கான காரியம். அப்படிச் செய்யாமல் உங்களிடம் வீண் ஆக்கிரோஷமும் குரோதமும் பாராட்டி உங்களை அவமானத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாக்குவது மனுஷத்தனம் ஆகாது. ஆகையால், என் தகப்பனார் இறந்துபோய் விட்டார் என்ற விஷயத்தை மாத்திரம் நான் வெளிப்படுத்தி அவருடைய உத்தரகிரியைகளை நடத்துவதொன்றே முக்கியமான விஷயம். அவர் இறந்துபோன வரலாற்றை எல்லாம் வெளிப்படுத்துவது அனாவசியமென்று நினைக்கிறேன். நான் உங்கள் விஷயத்தில் rமையோடு நடந்துகொள்ள விரும்புகிறது ஒரு பக்கமிருக்க, இந்த விவரத்தை எல்லாம் நான் வெளியிட்டால், என் தகப்பனாருடைய பெயருக்கும் யோக்கியதைக்கும் ஒருவித களங்கம் ஏற்படுமல்லவா? அதைத் தடுப்பதற்காகவும் நாம் எச்சரிக்கையாக நடந்து கொள்வதோடு இந்த வரலாற்றை எல்லாம் கூடியவரையில் நாம் மறைத்துவிடுவதே நல்லது. எல்லாவற்றிற்கும் நான் இதுவரையில் எனக்கு உதவியாக இருந்த அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கலந்து யோசனை செய்து அவருடைய புத்திமதிப்படி நடந்து கொள்ளலாம் என்று உத்தேசிக்கிறேன்’ என்றார்.

அதைக்கேட்ட லீலாவதி, ‘சரி; உங்களுக்கு எது ஒழுங்காகப் படுகிறதோ, அதைச் செய்யுங்கள். அந்தப் போலீஸ்