பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22

பூவின் சிரிப்பு


வாறு காட்டும் பகுதியே மிகுதி, இதோ அந்தச் சேரிச் சிறுவனைப் பாருங்கள் ;

உப்புப் பொரிங்துதிரும்
உவர்மண் ணிடிந்த சுவர்
பக்கத்தில் விளையாடும்
பாலகனைப் பாரீரோ!
கந்தலொரு ெகளபீனம்
கண்டவுடல்; மற்றும் அனல்
சிந்தும் வெயில் கடுங்குளிரே
சிறுவனுக்கு மேற்போர்வை:
சிரங்கு சொரியுங்கை:
செம்பட்டையான தலை;
உறங்கி விழுங்கண்கள்
உலர்ந்தசிறு கன்னங்கள்---

இப்படியாக அச்சிறுவன் வறுமையின் கோலமாக, நோயின் இருப்பிடமாகக் காட்சியளிக்கின்றான். அவனுடன் விளையாடும் சிறுமியின் நிலை இதைவிட இழிவானது.

கந்தல் அவளுடை
கன்னிக் கதுவுமில்லை,
இந்த உலகில் வந்த
இயல்தோற்றம் கொண்டிருந்தாள்.

இதற்கு மேலே அவளை வருணிக்க என் மனம் வருத் தத்தினால் இசையவில்லை. ஆனால் படிப்போருக்கும் கேட் போருக்கும் அவளுடைய வறுமை உருவம் நன்கு புலப்பட்டுவிடும் என்பது என் நம்பிக்கை.

இருவரும் கூடி மண் சேர்த்து, வீடுகட்டி விளையாடு கிறார்கள். விளையாடுவதற்கு நல்ல நல்ல கருவிகள், பொம் மைகள் உண்டா? வறுமையிலே பிறந்து, வறுமையிலே