பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிக்குருவி

53


 ஆடொன்றை அரசு கட்டிலாகக் கொண்டு அதன் மேலமர்ந்து தன் வயிற்றுப் பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தது. நான் அதன் மேல் கல்லை விட்டெறிந்தேன்.

"சாமி, ஏன் உங்களுக்கு அந்தக் குருவியின் மேல் அத்தனை கோபம்?' என்று கேட்டுக்கொண்டே இடையன் என்னை நோக்கி வந்தான்,

"அதற்கென்ன அத்தனை கொழுப்பு ? ஆட்டின் முதுகிலே உட்கார்ந்து கொண்டு அதன் வேலையைப் பார்! எத்தனை வஞ்சனை!" என்றேன் நான்.

"அந்தக் குருவியாவது நல்லது! மனிதன் அதை விடப் பொல்லாதவன்!" என்றான் கிழவன். எனக்குத் திடுக்கிட்டது. என்ன அப்படிச் சொல்லுகிறாய்? மனிதன் எப்படிப் பொல்லாதவனாவான்?’ என்று கேட்டேன்.

"கரிக் குருவி ஆட்டின் மேலே தந்திரமாக உட்கார்ந்து கொண்டிருப்பது மெய்தான். ஆனால் அது ஆட்டின் வயிற்றில் அடிப்பதில்லையே! தனக்கு வேண்டிய இரையைத் தானாகவே தேடிக் கொள்கிறது. மனிதன் அப்படி இல்லை" என்றான்.

அவன் சொல்வது எனக்கு ஒரு புதிராக இருந்தது. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், 'நீ என்னவோ பேசுகிறாய். அதில் ஒன்றும் கருத்து இருப்பதாகத் தோன்றவில்லையே?’ என்று மிடுக்கோடு கேட்டேன் .

"கருத்தா? இதுதான் கருத்து; அந்தக் குருவி ஆட்டின் மேலே உட்கார்ந்திருந்தாலும் அதன் உணவைத்