பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பூவின் சிரிப்பு

 குருவி எதற்காகப் பிறந்திருக்கிறது ? காக்கையாவது உலகத்தைத் துப்புரவு செய்கிறது; குயிலாவது இனிமை யாகக் கூவுகிறது. இந்தக் கரிக் குருவி என்ன செய்கிறது? வைகறையில் துயில் எழுப்ப ஒரு நல்ல அழகிய பறவை இருக்கக் கூடாதா? அதனுடைய குரலைச் சற்றே கேளுங்கள். எத்தனை அருவருக்கத்தக்க குரல். இவ்வாறாக நான் வெறுப்போடு எண்னமிடுவேன்.

இரட்டை வால் கரிக் குருவி வஞ்சமும் சூழ்ச்சியும் மிக்கது. அது ஆட்டின் மேலே ஒய்யாரமாக வாலை ஆட்டிக் கொண்டு அமர்ந்து கொள்ளும். ஆடு பாவம். மேய்ந்து கொண்டே போகும். போகப் போகச் செடிகளின் மேலே, புல்லின் மேலே, தரையின் மேலே ஒட்டிக் கொண்டிருக்கும் வெட்டுக்கிளி முதலிய சிறு பூச்சிகள் அச்சத்தால் பறந்து வேறிடம் பார்த்துக்கொள்ளக் கிளம்பும். இந்தக் குருவி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து லபக்கென்று, அவற்றை வாயில் போட்டுக் கொண்டு மறுபடியும் ஆட்டின் மேலே சவாரி செய்யத் தொடங்கிவிடும். அதைக் காணும்போது எனக்கு வெறுப்பு மேலும் பொங்கியெழும். சாதுவான ஆட்டை இப்படித் தன்னலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதைக் காண எனக்குப் பொறுக்க முடியவில்லை.

ஆனால் அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியால், அந்த வெறுப்பு மாறிவிட்டது.

ஒரு மாலை வேளை. பூங்காற்று மெல்லியதாய் மிகவினிதாய் வீசிக்கொண்டிருந்தது. நான் மேட்டு நிலங்களிடையே உலாவிக்கொண்டிருந்தேன். ஓரிடத்தில் ஒரு கிழவன் செம்மறி ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். வழக்கம்போல இரட்டை வால் கரிக் குருவி ஒன்று