பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

பூவின் சிரிப்பு


 வரலாம். அவரையும்,"உங்கள் முதல் மூன்று ஆண்டு வாழ்க்கையில் சென்றுபோன நாட்களைப்பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?" என்று கேட்டுவிட்டால், முடியாது என்று வாயடங்கி விடுவார். எனவே பொதுவாகப் பார்க்கப் போனால் ஒவ்வொருவருடைய முதல் ஐந்தாண்டு களில் அடைந்த அநுபவங்கள், எண்ணின எண்ணங்கள், உள்ளத்தில் பொங்கின உணர்ச்சிகள், எல்லாம் மறந்து போய்விடுகின்றன. குழந்தைப் பருவ வாழ்வு ஆழ்ந்த இருளில் முழுகிவிடுகிறது.

ஆனால் அந்தக் காலத்து வாழ்க்கை அநுபவங்களும், அவற்றால் ஏற்பட்ட உணர்ச்சிகளுமே ஒருவனுடைய பிற் கால வாழ்க்கையைப் பெரும்பாலும் திட்டப்படுத்துகின்றன. எந்தப் பருவம் மறந்துபோய் விடுகிறதோ அந்தப் பருவமே ஒவ்வொரு மனிதனையும் ஆக்குகிறது என்றால் அது பெரிதும் வியப்பாக இல்லையா? உலகத்திலே இன்னும் அற்புதங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் இது ஒன்று. 'ஒட்டிய இளமையில் ஓரைந்து நீங்கும் என்றபடி அந்தக் குழந்தைப் பருவ வாழ்க்கையே அடியோடு மறந்து போய் விடுகிறது என்றாலும், அதுவே இறுதிவரையிலும் மறைந்து நின்று எவ்வித மாறுதலுக் கும் எளிதில் இடங்கொடாமல் மனிதனை ஆட்டிக்கொண்டிருக்கிறது. அன்று அமைந்த தன்மைகளின் விளைவே வாழ்க்கையாக முடிகிறது.

ஒவ்வொருவனுக்கும் பிறப்பினாலேயே சில தன்மை கள் அமைகின்றன. இவை அவனுடைய பாரம்பரியம். வளர்ப்பினாலே சில தன்மைகள் அமைகின்றன. இவை அவனுடைய குழந்தைப் பருவ வாழ்க்கையைப் பொறுத்திருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்று சேருவதால் அவன் ஒரு தனிப்பட்ட மனிதனாகிவிடுகிறான்இயந்தி