பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கந்தா ஒளி

91



குயிலா, வாழ்நாள் முழுதும் பாடுவது உனது இயல்பு. இசையால் உலகத்துக்கு இன்பம் தருகிறாய். இன்பம் செய்தல் உனது நெறி; உனது வாழ்க்கை.

மனிதன் இன்று எப்படி இருக்கிறான்? வாழ்க்கை முழுதும் இன்பமே செய்கிறானா? இன்பமே அவன் செய்ய வில்லை என்று கூற முடியாது. ஆனால் அதைவிடத் துன்பம் செய்வதே அவன் வாழ்க்கையில் முதலிடம் பெற்றிருக்கிறது என்பதை நான் மறுக்க முடியுமா? அவன் எட்டிப் பிடித்த வெற்றிகள் பல என்பது மெய்தான். இன்பம் பலவற்றிற்கு ஏணியிட்டதும் மெய்தான். ஆனால் அவன் அடைந்த வெற்றியின் சிகரம் ஹிரோஷிமாவாக வல்லவோ காட்சியளிக்கிறது? பாட்டிசைக்கும் உன் வாழ்க்கையோடு மனிதனுடைய வாழ்க்கையை ஒப்பிடு வது சரியல்ல. உன் வாழ்க்கை தேன். மனித வாழ்க்கை கலப்படமற்ற தேனல்ல: அதில் நஞ்சு கலந்திருக்கிறது. கரியது உன் உடல்; ஆனால் உன் பாட்டு இனியது: அமுதம் சுரப்பது. கடவுளின் வடிவிலேயே மனிதன் தோன்றியிருக்கிறான் என்று கூறுகிறார்கள்; ஆனால் அந்த இறைவடிவத்திலே கரிய உள்ளம் புகுந்து கொண்டிருக்கிறது. அவன் உள்ளம் பேய்க் குகை. அதில் அறிவு மின்னல்கள் அவ்வப்போது பளிச்சிட்டாலும் அதன் இருட்டுப்படலம் இன்னும் விலகவில்லை.

இனிமையை வானிலே பரப்புவது உன்னுடைய முயற்சி அணுவின் நஞ்சை வானிலே பரப்புவது இன்று மனிதனுடைய உன்மத்த வெறியாக இருக்கிறது.

குயிலா, எங்களுக்காக நீ இரக்கப்பட வேண்டும். உனது தேனிசையை முழுக்க முழுக்க ஏற்று இன்புற்றுப் போற்றும் காலம் எங்களுக்கு வரும். அதன் முன்பு பல காலம் எங்கள் அறிவீனத்தினாலே தாங்களும் துன்புறு