பக்கம்:பூவும் கனியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்கால மன்னர்கள்



பார்த்தால் நமக்கு மண்ணாங்கட்டி போலத் தோன்றும்; ஆனால் உண்மையில் மண்ணாங்கட்டிக ளல்ல; அவைகள் மாணிக்கங்கள். குழந்தைகள் மாணிக்கங்கள்.

அந்த மாணிக்கம் வெளியே கிடக்காது. ஆழத்திலே இருக்கும். மிக மிக ஆழத்திலே இருக்கும். எல்லோருக்கும் தெரியாத ஆழத்திலே இருக்கும். அதனைக் கண்டுபிடிப்பதுதான் நமது வேலை. யாருடைய வேலை ஆசிரியருடைய வேலை. ஒவ்வொரு குழந்தையும் ஒரு மாணிக்கம்; அறிவுடையது. ஒவ்வொரு குழந்தைக்கும் என்ன என்ன திறமை இருக்கிறது என்பதனைத் தெரிந்து உற்சாகப்படுத்த, ஊக்கப்படுத்த, வளர்க்கப் பாடுபடவேண்டும்.

குழந்தைகள் இன்றைக்கு எவ்ளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன! ஒன்றாவது சோர்ந்து காணப்படுகிறதா ? இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வீட்டிலிருந்து நடந்து வந்து, இங்கே காத்திருந்தும் இவ்வளவு உற்சாகமாகத் தோன்றுகின்றனவே. இந்த உற்சாகம் என்றைக்கும் நிலைக்கவேண்டும். ஏன் நிலைக்கவேண்டும்? குழந்தைகள், வளரும் பெண்கள்- வளரும் பையன்கள். அவைகள் காட்டுச் செடிகள் அல்ல. கனகாம்பரப் பூக்கூட அல்ல. குழந்தைகள் அனிச்ச மலர்கள்; குழந்தைகள் நுட்பமான அனிச்ச மலர்கள்; முரட்டுத்தனமாகத் தொட்டால் வாடி

—5—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/11&oldid=492890" இலிருந்து மீள்விக்கப்பட்டது