பக்கம்:பூவும் கனியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



தூதன். எதற்குத் தூதன் ? ஒரு பள்ளிக்கூடத்தில் கொடுத்த அன்பை வாரி இன்னொரு பள்ளிக்குத் தரும் தூதன். நம் வாழ்க்கையும் அப்படித்தான் பெருஞ் செல்வம் உள்ளவர்களும் இருக்கிறார்கள், சிறு செல்வம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனல் எல்லோரும் தூதர்கள்தாம். இங்கே வாங்கி அங்கே கொடுப்பவர்கள்தாம். அதனால்தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பெரியவர்

'பகுத்துண்டு பல்லுயிர்
ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம்
தலை'

என்று சொன்னர். ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும்? அவரவர் தங்களுக்குக் கிடைத்த சுகத்தை, தங்களுக்குக் கிடைத்த பொருளை, சொத்து சுதந்திரங்களையெல்லாம் மற்றவர்க்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். தனக்காக மாத்திரம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் கைக்கு வருவது மற்றவர் கைக்குப் போனால்தான் பலன் உண்டு.

இதற்குப் பள்ளிப் பிள்ளைகள் நல்ல வழி காட்டினார்கள். தஞ்சைப் புயல் நிவாரண நிதிக்குச் சிறு குழந்தைகள் காலணா காலணாவாகச் சேர்த்து என் கையிலே கொடுத்தார்கள். எவ்வளவு பெரிய மனம், பாருங்கள்; எவ்வளவு நல்ல குணம், பாருங்கள்.

குழந்தைகளிடம் இல்லாத நல்ல குணம் இல்லை.

—4—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/10&oldid=486443" இலிருந்து மீள்விக்கப்பட்டது