பக்கம்:பூவும் கனியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்கால மன்னர்கள்



கள்தாம் - இந்த நாட்டின் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று நடத்தப் போகிறவர்கள். இந்த நாடு நல்ல நிலைக்குப் போக, பெரிய நிலையை அடைய, பெரியவர்களாக உள்ளவர்கள் காலாகாலத்தில் அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்ய வேண்டும்; கல்வியைக் கொடுக்கவேண்டும். அதனை ஒழுங்கானபடி கொடுத்தால், உற்சாகத்தோடு கொடுத்தால், துணிவு குறையாதபடி கொடுத்தால் அவர்கள் நல்லவர்கள் ஆவார்கள்.

பல்லுயிர் ஒம்புதல்

நீங்கள் இன்று அளவு கடந்த வரவேற்புக் கொடுத்தீர்கள். இவ்வளவு பணம் செலவு செய்து இத்தனை மாலை வாங்கி யிருக்கிறீர்களே என்று நினைத்தேன். செலவு செய்வது என்றால் எனக்கு விருப்பமிருப்பதில்லை. நான் கருமி அல்லன். ஆனால் தனி மனிதனுக்கு அதிகம் செலவு செய்யக்கூடாது என்பது என் கொள்கை. ஆகவே எனக்காகச் செலவு பண்ணினதில் எனக்கு வருத்தம் இருந்தது.

வருத்தம் சிந்தனையாக மாறினால்தான் பயன். வருத்தம் வெகுளியாக மாறினால் ஒன்றுக்கும் பயன் இல்லை.

இந்த மாலைகள் எல்லாம் பயன்பட வேண்டும் என எண்ணினேன். ஆகையால் `பங்கிட்டுக் குழந்தைகட்குக் கொடுங்கள்' என்றேன். நான் ஒரு

—3—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/9&oldid=492889" இலிருந்து மீள்விக்கப்பட்டது