பக்கம்:பூவும் கனியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



யும் ஒரே சமயத்திலே நான் தூக்கியிருந்தால் தூக்க முடியாமல் மயங்கியிருப்பேன். ஆனல் நல்ல வேளையாகப் பல தோழர்கள் உடன் இருந்து கைகொடுத்தார்கள். அதைப் போலத்தான் என் வேலைகூட என் வேலை பெரிய வேலை; சிறிய வேலை அன்று பெருமைக்காக நான் இப்படிச் சொல்லவில்லை. ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் குழந்தைகளையல்ல. சென்னை இராச்சியத்தில் உள்ள 63 இலட்சம் குழந்தைகளையும் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டுவர வேண்டும். நல்ல படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் என் வேலை. பெரிய வேலை தானே!

இதனை ஒருவனால் செய்ய முடியுமா? முடியாது இன்றைக்குப் பல தோழர்கள் என் மலர்ச் சுமையைப பங்கிட்டுக் கொண்டார்கள். இதைப்போல நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து, என் வேலையின் பளுவையும் பங்கிட்டு வாங்கிக்கொண்டால்தான் என் வேலை செம்மையாக முடியும்.

இன்று குழந்தைகள் - நாளை ஆளப் பிறந்தவர்கள்

ஏன் இந்த வேலை செம்மையாக முடிய வேண்டும் ? நீங்கள் இன்றைக்குக் குழந்தைகள், பையன்கள், பெண்கள்; ஆனால், நாளை இன்றைய குழந்தைகள்தாம்-இந்த நாட்டின் இளவரசர்கள், இளவரசி

—2—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/8&oldid=492888" இலிருந்து மீள்விக்கப்பட்டது