பக்கம்:பூவும் கனியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்கால மன்னர்கள்



குழந்தைகளா? ஒன்றுக்கு இரண்டுக்கு வராதா ? அவைகளுக்குத் தெருவில் இருக்கக் கூடாது என்று எப்படித் தெரியும் பெரியவர்கள் யாரும் செய்வதில்லை, குழந்தைகளும் செய்வதில்லை. பெரியவர் களைப் பார்த்துத்தானே குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன ! அப்பா அம்மா செய்வது இல்லை; ஆகவே பிள்ளைகளும் செய்வது இல்லை .

திட்டாதீர்கள், வாழ்த்துங்கள்

பெரியவர்களே ! என்ன குறை இருந்தாலும் குழந்தைகளைத் திட்டாதீர்கள். ஆனால் வாழ்த்துங்கள். வாழ்த்த வாழ்த்த நல்ல வளர்ச்சி அடைவார்கள். அதன்மூலம் நாட்டிலே நல்ல மக்கள் ஏற்படுவர். எதிர்கால அரசிகளையும் , அரசர்களையும் இன்று விட்டுவிட்டு, 21 வயது ஆனபிறகு 'உரிமை வந்து விட்டது; அறிவோடு பணி செய்யுங்கள்' என்று சொன்னால், திடீர் என்று அறிவு வருமா ? ஆற்றல் வருமா ? சாமர்த்தியம் வருமா ? துணிச்சல் வருமா ? நிதானம் வருமா ? நாலுபேரைச் சேர்த்துக் காரியம் செய்கின்ற குணம் வருமா ? இவையெல்லாம் பருவத்தே பயிர் செய்ய வேண்டுவன. சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே துணிவு வரும்படி வளர்க்க வேண்டும். இன்றைக்குக் குழந்தைகள் காட்டிய விளையாட்டுக்க ளெல்லாம் மிகச் சிறப்பாக இருந்தன. ஆடல் பாடல் மிகச் சிறப்பாக இருந்தன; துணிச்சலாக இருந்தன. இவைகள் வளர வாழ்த்துங்கள்.

— 7 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/13&oldid=492892" இலிருந்து மீள்விக்கப்பட்டது