பக்கம்:பூவும் கனியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்கால மன்னர்கள்



காட்டாறு போன்று தீமை பயப்பவன் ஆவான். எனவே கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் இளமையிலேயே கற்றுக்கொள்க.

கற்றதனால் ஆய பயன்


நல்ல உறுதியான உடலும், கூரிய மதியும், கட்டுப்பாடும், ஒழுங்கும் எதற்குப் பயன்பட வேண்டும்? யாருக்குப் பயன்பட வேண்டும்? ஆக்கத்திற்கா? அழிவிற்கா? தனக்கா ? பிறருக்கா?

அணுவைப் பிளந்து ஆற்றல் மிக்க சக்தியைக் கண்ட மனித சமுதாயம், அச் சக்தியால் உலகம் என்று அழிக்கப்படுமோ என அஞ்சி அஞ்சி அல்லலுறுகின்ற தன்றோ? காரணம் என்ன? ஆக்க வேலைக்கு அவற்றைப் பயன்படுத்தத் தவறியதேயாகும். அறிவும் வலிவும் வளர்ந்த அளவுக்கு மக்களின் உள்ளம் வளர்ந்தபாடில்லை. ஆகவே வலிமை யெல்லாம்-அறிவெல்லாம்-இதுவரை `தான்' என்கிற சிறையிலிருந்து வெளிப்படவில்லை. தன் பெண்டு, தன் பிள்ளை என்கிற தன்னலம், பொதுநலத்திற்கு ஊறாக நிற்கிறது. `தான்' என்பதைக் குறைத்து 'நாம்' என்பதைப் பெருக்கப் பெருக்கத்தான், நாம் மக்கள். நிலையை எய்துவோம். தனி உணர்ச்சி குறைந்து, சமூக வளர்ச்சி வளர வளரத்தான் நம் துன்பங்கள் தொலையும்.

— 17 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/23&oldid=492909" இலிருந்து மீள்விக்கப்பட்டது