பக்கம்:பூவும் கனியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



மக்கட் பண்பு

பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ள குறள்,

'அரம்போலும் கூர்மைய

ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில் லா

தவர் '


என்று இடித்துரைப்பதை மறந்துவிடாதீர்கள். கல்வியின் நோக்கம் மக்கட் பண்பைப் பெறுவதே. எது மக்கட்பண்பு என்று சிறிது சிந்திப்போம். மக்கட் பண்பாவது, பிறிதினோய் தந்நோய்போல் நோக்குதலாகும். எனவே, மக்கள் துன்பத்தைத் தன் துன்பமாக எவன் கருதுகிறானோ, அவனே கல்விமான். மற்றவர்கள் எவ்வளவு அறிந்திருந்தாலும், எத்துணைப் பட்டங்கள் பெற்றிருந்தாலும், எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் மக்கள் நிலையை அடையாதவர்களே. மக்கள் நிலையை அடையவே நாம் எல்லோரும் விரும்புவோம் என்பது உறுதி. எனவே, நம்மைச் சூழ்ந்துள்ளோர் அடைகிற துன்பங்கள் எவை எவை, அவற்றை நீக்க வழிகள் எவை எவை? என்று கவனிப்போம்.

துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும்

வறுமை, அதன் விளைவான பட்டினி; அறியாமை, அதன் விளைவான மூட நம்பிக்கைகள், மூடப் பழக்க வழக்கங்கள்; சாதி ஏற்றத் தாழ்வு, அதன்

— 18 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/24&oldid=492911" இலிருந்து மீள்விக்கப்பட்டது