பக்கம்:பூவும் கனியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




இளைஞர்களுக்கு அறிவுரை


விளைவான சாதிச் சண்டை; சமய வெறி, அதன் விளைவான சமயப் போராட்டங்கள்; இவற்றின் கட்டு விளைவான அமைதியின்மை-ஆகிய துன்பங்களை நாம் அனுபவித்துவருகிறோம். இத்துன்பங்களை நீக்க முடியுமா? இப்படியே விட்டுவைக்கலாமா ? நீக்க முடியும், நீக்கவேண்டும் என்பதே என் முடிவு. பிற நாடுகள் செய்துகாட்டிய முடிவுமாகும்

நல்குரவு

வறுமை ஒரு சமூகத் தொற்று நோய். அதைப் போக்குவது சமூகத்தின் முதற் கடமை. அதனை எவ்வழியிற் போக்குவது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். உழைப்பைப் பெருக்கி உற்பத்தியைப் பெருக்கினால் எல்லோரும் வறுமையின்றி வாழலாம் என்பது உண்மையா? பெற்ற பொருள்களை இப் போதுள்ள முறைக்கு மாறாக விநியோகிப்பது வாயிலாக வறுமையைப் போக்குவதா? என்ற கேள்விகளுக்குப் பதில் என்னிடத்திலிருந்து எதிர்பார்க்காதீர்கள். இரண்டில் எதைக் கொண்டாலும், இரண்டும் மறந்துவிட்ட மற்றொன்றை நான் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். அது எது ? செலவு முறை; நம் மக்களின் செலவு முறையைக் குறிப்பிடுகிறேன்.

மயக்கத்திற்கோ, வீண் பெருமைக்கோ ஆனவற்றிற்கு நாம் ஏராளமான செல்வத்தைப் பாழாக்கு

— 19 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/25&oldid=493092" இலிருந்து மீள்விக்கப்பட்டது