பக்கம்:பூவும் கனியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



கிறோம். அவற்றைத் தடுத்து வாழ்க்கையை நிரந்தரமாக நல்வழிப்படுத்தும் துறைகளுக்கு மிகுதியாகச் செலவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். அளவறிந்து செலவிடத் தெரியாத மக்களை எம்முறையும் காப்பாற்றாது என்பதை மறவாதீர்கள்.

அறியாமை

தற்குறித்தன்மை நமக்குள்ள அடுத்த துன்பம். மக்கட் பெருக்கத்திற்குப் பெயர்போனதைப் போன்றே தற்குறித்தன்மைக்கும் நம் நாடு உலகறிந்ததாய் இருக்கிறது. அறியாமையின் விளைவாய் நம்மிடையே உள்ள மூட நம்பிக்கைகளும் கண்மூடி வழக்கங்களும் எண்ணிறந்தன. நாம் மக்கள் தன்மையை முழுதும் அடைவதற்குக் குறுக்கே நிற்கும் இவற்றையெல்லாம் விரைவில் குழி தோண்டிப் புதைக்கவேண் டும். மன்னர்களாகிவிட்டவர்களை மண்ணாங்கட்டி நிலையில் விட்டுவைப்பது இழிவுமட்டு மன்று, பெரும் தீங்குமாகும். எனவே, இத் தலைமுறையின் முழு கவனமும் முயற்சியும்

'எல்லோரும் கல்வி கற்றுப்

பன்னரும் கலைஞா னத்தால்,
பராக்கிர மத்தால், அன்பால்,

உன்னத இமமலை போல்'


கீர்த்தி ஓங்கிடுவதற்கான பணிகளில் திருப்பப்பட வேண்டும். இதற்கான பொறுப்பையும் உழைப்பை

— 20 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/26&oldid=492914" இலிருந்து மீள்விக்கப்பட்டது