பக்கம்:பூவும் கனியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



முறையிலே மடல்கள், சுவடிகள், நூல்கள் முதலியன ஆக்கியுள்ளீர்கள். இந்தப் பண்ணையின் முயற்சி முதல் முயற்சி; தமிழிலே முதல் முயற்சி. உங்களில் ஒருவரைத் தவிர, மற்றவ ரெல்லாம் இந்த முயற்சியிலே முதன்முதலாகப் பங்குகொள்கிறீர்கள் என்று சொல்வேன். இது முதல் முயற்சிமட்டு மன்று; பலருக்கு முதற்பயிற்சியுங்கூட. இதுவரையில் முதியோர் கல்வியில் ஈடுபடாத பலர், பல துறையில் ஆடிக் கொண்டிருந்த பலர், இது முடியுமா முடியாதா என அரை மனத்தோடு உள்ள பலர் இதனைத் தொடங்கினீர்கள். ஆனால், எனக்குமட்டில் ஒரு மன உறுதியுண்டு. பல பேர்க்குத் தங்கள் திறமை தெரிவதில்லை. நெருக்கடி வரும்போதுதான் அந்த ஆற்றல் வெளி வருகிறதே ஒழிய முன்கூட்டித் தெரிவது இல்லை. இதுதான் மனிதனிடம் உள்ள தனிப் பெருஞ்சிறப்பு. இந்தப் பெருஞ் சிறப்பைப் பற்றிய நம்பிக்கை எனக்கு உண்டு. ஆதலால் பண்ணையில் தொழில் புரிய நீங்கள் இறங்கியபின், நல்ல பலன் கிடைக்கும் என்றே நான் உறுதிகொண் டிருந்தேன்.

நீங்கள் எல்லாம் இந்தத் துறைக்குப் புதியவர்கள். ஆதலால் உங்களைத் தேர்ந்தெடுத்த சிறப்போ இழிவோ என்னையே சாரும். துணிவாகத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழ்ந்ததுமட்டு மன்றி, நல்ல முறையிலே பலனுள்ள

— 38 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/44&oldid=493017" இலிருந்து மீள்விக்கப்பட்டது