பக்கம்:பூவும் கனியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதியோர் கல்வி-வழியும் வகையும்



பேர்போனது. பாதாளத்தில் உள்ள தண்ணிரைக் கொண்டுவரும் உழவர்களையும் இந்தக் கோவை மாவட்டத்திலே காணலாம். நிலம் ஈயாது என்று சொல்லி விட்டுவிடாத உணர்ச்சியும் ஊக்கமும் பெற்று, முயற்சியில் தளராத மக்களை இங்கே பார்க்கலாம். இவ்வாறு தொழில் திறமை மிக்க மக்கள் நிறைந்த இடத்தில் கொண்டாடப்படும் இவ்விழாவும் பொருத்தமான முறையிலே கனம் அமைச்சர் அவர்கள் தலைமையில் கொண்டாடப்படுகிறது. கனம் அமைச்சர் அவர்களை உழவு அமைச்சர் என்றுமட்டும் அழைப்பித ழிலே குறிப்பிட்டுள்ளீர்கள்; ஒன்று மறந்துவிட்டீர்கள். அவர் உழவு அமைச்சர்மட்டுமல்லர், தொழில்துறை அமைச்சருங்கூட; பாரதி யார் சொன்னதுபோன்று உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்கின்ற முறையிலே, இரண்டு துறையையும் ஒரு முகமாக நடத்துகிற அமைச்சர். 'இலக்கியத் தொழிற்சாலை’(Literary Workshop) என ஆங்கிலத்திலே சொல்ல, `இலக்கியப் பண்ணை' என்று நாம் சொல்ல, இரண்டுமே பொருந்துகின்ற வகையிலே, நல்ல பணியாற்றிய இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் அவர்கள் தலைமை தாங்கியது மிகப் மிகப் பொருத்தமே.

முயற்சியால் முடியாதது ஒன்றுமில்லை

இந்தக் கண்காட்சியை நான் திறந்துவைக்கப் போகிறேன். நீங்கள் நன்முயற்சி எடுத்து, நல்ல

— 37 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/43&oldid=492959" இலிருந்து மீள்விக்கப்பட்டது