பக்கம்:பூவும் கனியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



செய்ய முற்படவேண்டும். அத்தகைய தொண்டினைச் செய்யமுற்படாத மனிதன், எவ்வளவு திறமையுடைய அலுவலனாக இருப்பினும், எவ்வளவு திறமையுடைய நிபுணணாக இருப்பினும் அவன் முழு வளர்ச்சி பெற்ற மனிதன் அல்லன் என்று தா ன் கருதுகிறேன். எனவே, ஒவ்வொருவரும் பொதுநலச் சேவையிலே ஈடுபட வேண்டும்.

ஓய்வு எல்லோருக்கும் உண்டு

உங்களுக்கு நிறைய ஓய்வு நேரம் உண்டு. இல்லை என்று நீங்கள் சொன்னால், உங்கள் நேரத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள வில்லை என்றுதான் சொல்வேன். வேலை மிகுதி என்று சொல்லிவிட முடியாது. காலத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டால், அதிலும் கொஞ்சம் பிடிவாதம் ஏற்பட்டுவிட்டால், கண்டிப்பாக ஒய்வு உண்டு. அந்த ஓய்வு நேரத்தை எதிலே செலவு செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். நமது தொழில் ஆசிரியத் தொழில்; கல்வி கற்பிக்கின்ற தொழில்; இந்தத் தொழிலின் தொடர்பாக நாம் செய்யவேண்டிய வேலைகள்-சேவைகள்-பள்ளிக் கூடத்திற்கும் கல்லூரிக்கும் அப்பாலும் உண்டு. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், நம் நாட்டில் தற்குறிகள் மிகுதி. இது உங்களுக்குத் தெரியும். அந்த நிலையைப் போக்கப் பாடுபடவேண்டும்.

— 40 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/46&oldid=493019" இலிருந்து மீள்விக்கப்பட்டது