பக்கம்:பூவும் கனியும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதியோர் கல்வி - வழியும் வகையும்



படிப்பும் அறிவும்

படித்தவர்கள் எல்லாம் அ றி வாளி கள் என எண்ணிக்கொண் டிருக்கிறோம். இல்லை, இல்லை. படிக்காதவர்களிலும் அறிவாளிகள் உண்டு. அவர்களில் பலர் நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் என்பதை நான் உங்களுக்கு முன்னொரு சமயம் சொன்னேன். நீங்கள் முதியோர்களிடம் செல்லும்போது இதனை உணர்வீர்கள் என்றும் கூறினேன். உங்களுக்குப் புது அறிவும் ஏற்படப்போகிறது என்றும் சொன்னேன். அப்படியே கண்டீர்கள் என உங்கள் தலைவர் அறிக்கையில் படித்தார்கள். அது எனக்கு வியப்பாக இல்லை; உங்களுக்கு வேண்டுமானால் வியப்பாக இருந்திருக்கலாம்.

அவர்கள் படிக்காதவராக இருக்கலாம்; ஆனல் அறிவாளிகள். அதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் முதியோராக இருக்கலாம்; ஆனால், அனுபவம் உடையவர்கள். ஆகவே, அவர்களுக்கு அறிவும் அனுபவமும் நிறைய இருக்கின்றன. ஆனால் ஒரு வித்தைமட்டும் அவர்களுக்குத் தெரியாது. என்ன வித்தை எழுத்தைப் புரிந்துகொள்கிற வித்தை. அதுதான் அவர்களுக்குத் தெரியாது. நாம் அவர்களுக்கு அதில் ஊக்கம் அளித்துவிட்டால், விழிப்பு

— 41 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/47&oldid=493096" இலிருந்து மீள்விக்கப்பட்டது