பக்கம்:பூவும் கனியும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



ஏற்படுத்திவிட்டால், அவர்கள் கண்களைத் திறந்து-விட்டால் அவர்களால் பெருங்காரியங்களைச் செய்ய முடியும்.


முதியோர் கல்வி எதற்கு ?


ஏன் இதனைச் செய்யவேண்டும் என்ற கேள்வி கூட அடுத்து ஏற்படுகிறது. பலர் முதியோர் கல்வியைப்பற்றி ஐயுறுகிறார்கள். அது, பன்னிரண்டு மணிக்குமேல் திரும்பவும் சூரியனை உச்சிக்குக் கொண்டுவர முயல்வதுபோல் வீணான முயற்சி என்றுகூடச் சொல்கிறார்கள். `அவர்கள் தலைமுறையில் எப்படியோ தொலைந்து போகிறது' என்று இருபது வருடமாகச் சொல்லிவரும் வாதமும் எனக்குத் தெரியும். படிக்கும் வயது வந்த குழந்தைகளைப் பார்த்துக்கொண்டால் போதும், முதியோர் கல்வி யைப்பற்றிக் கவலேயே வேண்டாம், அவர்களைத் திருத்த முடியாது. நாய் வாலைத் திருத்திய மாதிரி தான் ஆகும். இன்னும் 16 பேரையே சரியாகப் படிக்கவைக்க முடியாத நிலையில், 84 பேரைப் படிக்க வைப்பது எங்கே? ஆகவே முடிந்த காரியத்தில் ஈடுபடுவோம்' என்று சொல்வ தெல்லாம் சரியாகாது. முதியோர் கல்வியும் நடைபெற வேண்டும்; இளைஞர் கல்வியும் நடைபெற வேண்டும். எந்த வேகத்தில் நடைபெறவேண்டும் என்றால், மக்கள் ஆதரவு எந்த வேகத்தில் இருக்கிறதோ, அந்த

— 42 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/48&oldid=493020" இலிருந்து மீள்விக்கப்பட்டது