பக்கம்:பூவும் கனியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதியோர் கல்வி—வழியும் வகையும்



வேகத்தில் அதனைச் செய்தல்வேண்டும். முதியோர் கல்வி மெல்ல நடந்திருக்கிறது என்றால், இன்னும் அவர்களுக்கு விழிப்பு வரவில்லை, கல்வியின் இன்றியமையாமையை அவர்கள் தெரிந்துகொள்ள வில்லை என்பதுதான் பொருள்.

இளைஞர்களுடைய கல்வியைமட்டும் கவனித்துக்கொண்டு ஓரிரு தலைமுறையிலே, கல்லாத முதியோர் இறந்த பிறகு, எல்லோரும் கல்வி கற்ற ஒரு நல்ல தமிழ்நாடு இந்தியாவிலே ஏற்பட்டுவிடும் என்று எண்ணினால், அது அலை ஒய்ந்த பிறகு கடலில் தலை முழுகலாம் என்று எண்ணுவது போலாகும். ஆகையால் முதியோர் கல்வி வளரவேண்டும்; வளர்ந்துகொண்டே யிருக்க வேண்டும். ஏன் என்றால், நம் நாட்டு மக்களை மன்ன ராக்கிவிட்டோம்; மன்னருக்குப் படிப்பு வேண்டும்.

நம் நாட்டு மக்கள். அறிவுடையவர்கள்; ஆதலால்தான் இந்த அளவிற்காவது குடியாட்சி ஒழுங்காக நடைபெற்று வருகிறது. மற்றப்படி எப்படி இருந்தபோதிலும் தமிழ் நாட்டிலே நல்ல அறி வுடைய மக்கள் மட்டுமல்ல, வாழையடி வாழையாக நிதானத்திலே சிறந்த மக்கள், சிந்தனையோடு கூடி வாழுகின்ற மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிறைய அறிவுபெற்று,

நிதானத்தோடு நிறைய உணர்ச்சியும் உற்சாகமும் பெற்றுத் தாங்களே முன்

— 43 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/49&oldid=493021" இலிருந்து மீள்விக்கப்பட்டது