பக்கம்:பூவும் கனியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



னுக்கு வந்து, பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் காலம் வந்தால்தான் மெய்யான குடியாட்சி ஏற்பட முடியும்.

குடியாட்சி பெற்றது நம்மில் பலருக்குப் பெரிய பெரிய அலுவல்கள் கிடைப்பதற்கன்று. வெள்ளைக்கார னிடத்தில் இருந்த பெரிய அலுவல்கள் எல்லாம் நமக்குக் கிடைக்கிற தென்றால் , அது போதாது. குடியாட்சி நமக்குப் பயன்படவேண்டும். மூலை முடுக்குகளி லெல்லாம் - குடிசை குப்பை மேடுகளிலெல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் குந்திக் கிடக்கிறானே, அவனுக்குப் பயன்படவேண்டும். எப்படிப் பயன்பட வேண்டும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் என்னைக் காட்டிலும் நன்கு அறிவீர்கள். என்னைவிட அறிவு நிறைந்த ஒருவர், உண்மையைத் துணிச்சலாகப் பேசுகின்ற ஒருவர் பாரதியாராவார்; அவர்,


வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்கும்
கலைப் பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார்.


என்று கூறுகிறார். அந்தக் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி பெறுவதுதான் குடியாட்சியின் இலட்சியம். அதற்காகத்தான் நம் அருந்தலைவர்க ளெல்லாம் அரும்பாடு பட்டுப் பல ஆண்டுகள் தியாகம் செய்

— 44 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/50&oldid=493022" இலிருந்து மீள்விக்கப்பட்டது