பக்கம்:பூவும் கனியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதியோர் கல்வி—வழியும் வகையும்



தார்கள். அந்தத் தியாகம் பலன் பெறவேண்டு மென்றால், நாம் அவ்வளவு பெரிய தியாகம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் சேவை செய்ய வேண்டும். பிடிவாதமான சேவை, பல நாள் செய்ய வேண்டும். முதியோர் கல்வியில் நாம் எல்லோரும் ஈடுபடவேண் டும். உங்களுக்குக் காசு கொடுக்க முடிகிறதோ இல் லேயோ, உழைப்பைக் கொடுக்க முடியும். ஒவ்வொரு வரும் சிலருக்காவது கல்வி கற்பிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் நம் பங்குக்கு என்ன செய்திருக்கிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

நம்மில் யாரும் தங்கள் பொருளாலேயே படித்து விடவில்லை. ஊரார் வரிப் பணத்தையும் சேர்த்துத் தான் பள்ளிகள், கல்லூரிகள் நடைபெறுகின்றன. நாம் கட்டும் சம்பளம், கல்விக்காக நாட்டில் ஏற்படும் செலவில் ஒரு பகுதிதான். யார் வரிப் பணம் கொடுத்தார்களோ, அவர்கள் இன்னும் படிக்காமல் இருக்கிறார்கள், கண் விழிக்கா திருக்கிறார்கள். அவர்களின் கண்ணைத் திறந்துவிடுவது நம்முடைய கடமையாகும்.

பயிற்சியின் பயன் துருப்பிடிக்கக் கூடாது

நல்ல பயிற்சியைப் பெற்றுள்ள நீங்கள் அதனைத் துருப் பிடிக்கவிடாமல்-'ஓய்வு இல்லை’ என்று சொல்லாமல்-உங்கள் பணிகளையும் செய்துவிட்டு, அதற்கு மேலும் ஓய்வு இருப்பதனை உணர்ந்து, புதுப் புதுச்

— 45 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/51&oldid=493023" இலிருந்து மீள்விக்கப்பட்டது